உலகின் இரண்டாம் இடம் வகிக்கும் ஏ.எம்.சி எனும் அமெரிக்க திரைப்பட நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் வாங்குவதாக சீனாவின் தாலியன் நகரிலுள்ள வான்டா குழுமம் அண்மையில் அறிவித்தது. இதன் மதிப்பு 260 கோடி அமெரிக்க டாலர் ஆகும் . சீனாவின் பன்னாட்டு தொழில் துறை சினிமா துறையில் அந்நிய நிறுவனங்களுடன் கைகோர்ப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. வான்டா குழுமம், வீடு மற்றும் வீட்டுமனை வர்த்தகத் தொழில் நிறுவனம். 2005ல் தொடங்கப்பட்ட வான்டா நிறுவனம் தொழில் துறையில் பெருமளவு முதலீடு செய்வதையே விரும்புகிறது. அமெரிக்க திரைப்பட நிறுவனம் ஒன்றின் பங்கினை வாங்குவதன் மூலம் அதன் பெரும்பாலான மூல வளங்களை வான்டா குழுமம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. பண்பாட்டுத்துறை வளர்ச்சி அடைகின்ற இந்தநேரத்தில் அமெரிக்க நிறுவனத்தின் பங்குகளை வாங்கியிருப்பது ஓர் ஆக்கமுள்ள அறிகுறி என்று பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் பண்பாட்டு வள ஆய்வகத்தின் துணைத்தலைவர் சாங் யி வூ குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின் இந்த அரசு சாரா சீன வர்த்தக நிறுவனம் ஆசியாவின் மிகப் பெரிய திரைப்பட வர்த்தக நிறுவனமாக மாறும். சீனாவின் ஆற்றலை வலுப்படுத்தும் வகையில் உள்நாட்டு பண்பாட்டுத் தொழிற்துறைக்கு சீனா பெரும் ஒதுக்கீட்டை வழங்கி வருகிறது. இதே சமயத்தில் சீன பண்பாட்டுத்துறை மேலை நாடுகளில் நுழைய பலவகையான தடைகள் இருப்பதும் கவனிக்கத்தக்கது. இந்நிலையில் உலக திரைப்படச் சந்தையிலும் அனைத்துலகப் பண்பாட்டுத்துறையிலும் குறிப்பிட்ட இடத்தை பிடிக்க அனைத்து செயல்பாட்டு வழக்கங்களை அறிந்து கொண்ட தொழில் நிறுவனங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் சாங் யூ வூ கருத்து தெரிவித்துள்ளார். வான்டா நிறுவனத்தின் இச்செயல்பாடு திரைப்பட சந்தையின் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்பை உருவாக்கி உள்ளது. சீனாவின் குறிப்பிடத்தக்க சில முக்கிய கருத்துக்கள் திரைப்படங்களின் மூலம் உலகச் சந்தையில் நுழையலாம். உலகம் சீனாவை மேலும் அறிந்து கொள்ளச் செய்கின்ற வாய்ப்பை இது உருவாக்க வாய்ப்பு உள்ளது என சீனப் புதிய திரைப்பட கூட்டமைப்பு நிறுவனத்தின் முன்னாள் துணைத்தலைவர் கௌஜிவேன் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: