திருநெல்வேலி, ஜூன் 1-கூடங்குளம் அணு உலையில் 75 டன் யுரேனி யம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அணுமின் நிலைய வளாக இயக்குநர் சுந்தர் தெரிவித் துள்ளார் .நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இரண்டு அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளள. இந்த அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப் பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவ தால், அணு உலை பணியில் சுணக்கம் ஏற்பட்டது தமிழக அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து தற்போது அணுமின் நிலை யத்தில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே அணு உலை களில் மாதிரி எரிபொருள் நிரப்பி வெப்பநீர் சோதனை நடத்தப்பட்டது. இதை நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கையை இந்திய அணு சக்தி துறை ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப் பித்தது. அதன் அடிப்படை யில் மாதிரி எரிபொருளை அகற்ற அணுசக்தி ஆணை யம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, கடந்த இரு வாரங்களுக்கு முன் மாதிரி எரிபொருளை அகற்றும் பணி தொடங்கியது.இந்த பணிகள் குரேஷியா நாட்டு அணு விஞ்ஞானிகள் குழு முன்னிலையில் நடந்தது. இப்பணி சனிக்கிழமைக் குள் முடிவடையும் என கூடங்குளம் அணுமின் நிலையவளாக இயக்குநர் சுந்தர் தெரிவித்துள்ளார்.இந்த பணிகள் முடி வடைந்த பின் அதுபற்றிய ஆய்வறிக்கையும் இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு. அதன் பேரில் யுரேனியம் எரிபொருள் நிரப்ப ஒப் புதல் பெறப்படும். அனுமதி கிடைத்தவுடன் அணு உலைக்குள் மொத்தம் 75 டன் யுரேனியம் நிரப்பப் பட உள்ளது.இந்த பணி கள் 10 நாட்கள் நடக்கும்.

Leave a Reply

You must be logged in to post a comment.