அம்பத்தூர், ஜூன் 1 –
அம்பத்தூர் ப்ரித்விபாக்கம் பிரதான சாலையில் வசிப்பவர் வெங்கடேசன். இவர் கார் ஓட்டுநராக வேலை செய்கிறார். இவரது மகன் குருராஜ் (17) அம்பத்தூர் புதூர் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 தேர் வில் நல்ல மதிப்பெண் பெற்று (1072) வெற்றி பெற்று இருந்தார்.இந்நிலையில் மேற்கொண்டு நல்ல கல்லூரியில் சேர்ந்து படிக்க வைக்க அவர்களது குடும்ப சூழ்நிலை இடம் தரவில்லை. இதனால் மனம் உடைந்து காணப் பட்ட குருராஜன் வியாழக்கிழமை மாலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Leave A Reply

%d bloggers like this: