ஹைதராபாத், ஜூன் 1-ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவாக, ஆந் திராவின் ஆளும் கட்சி யான காங்கிரஸ் எம்எல்ஏ நானி தனது பதவியை ராஜி னாமா செய்தார். மேலும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெகனின் தாயாரும் புலவெந்தலா சட்டசபைத் தொகுதி எம் எல்ஏவுமான விஜயம்மாவை விசாகப்பட்டினத்தில் வியா ழக்கிழமையன்று சந்தித்தனர்.சொத்துக்குவிப்பு வழக் குத் தொடர்பாக சன்சல் குடா சிறையில் ஜெகன் மோகன் வைக்கப்பட்டுள் ளார். அவரை சந்தித்த 4வது காங்கிரஸ் எம்எல்ஏ நானி ஆவார். ஜெகனை சிறையில் சந்தித்தப்பின்னர் அல்லா நானி என்ற ஏ.கே.ஸ்ரீனி வாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், தாம் ஒய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாகவும், இடைத்தேர்தலுக்காக விஜயம்மா மேற்கொள் ளும் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்கப்போவதாகவும் தெரிவித்தார்.காங்கிரஸ் எம்எல்ஏக் களான ஆர்.வி.எஸ்.கே. ரங்காராவ் (பொப்பிலி), துவாரம்புடி சந்திரசேகர ரெட்டி (காகிநாடா நகரம்), ஜெயமணி (பார்வதிபுரம்) ஆகியோர் விசாகப்பட்டி னத்தில் உள்ள கொத்தாரலா பகுதியில், பிரச்சாரத்தில் இருந்த விஜயம்மாவை சந் தித்தனர்.ரங்காராவ் ஏற்கெனவே, காங்கிரஸ் உறுப்பினர் மற் றும் எம்எல்ஏ பதவியை விட்டு விலகிவிட்டார். எனவே, ஒய்.எஸ்.ஆர் கட்சியில் அந்த பெண் தலைவர் விரைவில் சேருவார் என எதிர்பார்க் கப்படுகிறது.சந்திரசேகர ரெட்டி ஜெகன் முகாமில் இருந்து காங்கிரஸ் சென்று மீண்டும் ஒய்எஸ்ஆர் கட்சிக்கு வரு கிறார். அரசியல் பழிவாங் கும் நடவடிக்கையாக ஒய் எஸ்ஆர் குடும்பத்தை காங் கிரஸ் அரசு குறி வைத்துள் ளது. எனவே ஒய்எஸ்ஆர் குடும்பத்திற்கு உறுதுணை யாக இருப்போம் என இந்த எம்எல்ஏக்கள் தெரிவித்தனர்.ஜெகனின் தந்தை ராஜ சேகர ரெட்டியால் நாங்கள் எம்எல்ஏ ஆனோம். எனவே ஒய்.எஸ்.ஆர். குடும்பத்திற்கு உறுதுணையாக உள்ளோம் என அந்த காங்கிரஸ் எம் எல்ஏக்கள் கூறினர்.தனது ஆதரவாளர்களை சந்தித்த பின்னர் காங்கிரசை விட்டு விலகும் முடிவை எடுப்பேன் என ஜெயமணி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.