கரூர், ஜூன் 1-ரூ.3 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் கரூர் செட்டிப்பாளையம் பாசன வாய்க்கால் சீரமைப்பு, பணியை கிருஷ்ணராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப் பினர் காமராஜ் துவக்கி வைத்தார். கரூர் அருகே செட்டிப் பாளையத்தில் தடுப்பணை உள்ளது. அமராவதி ஆற் றில் தண்ணீர் வரும் காலங் களில் இந்த தடுப்பணையில் இருந்து செல்லும் வாய்க் கால்கள் மூலம் கருப்பாம் பாளையம், சுக்காலியூர், மாயனூர் பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். கடந்த ஆட்சி யில் முறையான பராமரிப்பு இல்லாததால் வாய்கால்கள் சிதிலமடைந்து விட்டன. எனவே இதனை சீரமைத் திட வேண்டும் என இவ் வாய்கால்கள் மூலம் பயன் பெற்று வந்த விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.இதுதொடர்பாக கிருஷ் ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். காமராஜ் எடுத்த முயற்சியின் பேரில், நீர்வள, நீலவள திட்டத்தின் கீழ் செட்டிப்பாளையம் தடுப்பணை வலதுகரை வாய்க்காலை சீரமைக்க தமிழக அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்நிதி யின் மூலம் செட்டிப்பாளை யத்தில் இருந்து வலது கரை வாய்க்கால் மாயனூர் வரை 27 கீ.மீ தூரத்திற்கு வாய்க் கால் தூர்வாருதல், தடுப்புச் சுவர் கட்டுதல், மடைகளை சீர மைக்கும் பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் 2230 ஹெக் டேர் ஆயக்காட்டு நிலங் கள் பாசன வசதிபெறும்.இந்நிலையில் வாய்க் கால் சீரமைக்கும் பணியை காமராஜ் எம்.எல்.ஏ துவக் கிவைத்தார். பொதுப்பணித் துறை உதவி செயற்பொறி யாளர் நரேந்திரன், உதவி பொறியாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: