“ஆனந்த்தை தோற்கடிப்பது இளைய தலை முறைக்கு மிகவும் கடினமான காரியம்” என்று மே 2008-ல் பிரபல சதுரங்க வீரரும் முன்னாள் உலகச் சாம்பியனுமான கேரி காஸ்பரோவ் கூறிய தீர்க்கதரிசனமான கூற்றினை விஸ்வ நாதன் ஆனந்த் மீண்டுமொரு முறை நிரூபித் துள்ளார்.சதுரங்கம் ஒரு உடல்ரீதியான விளையாட்டு அல்ல. மனதும் மூளையும் ஒருமித்து கணக் கிட்டு, திட்டமிட்டு ஆடும் ஆட்டம் ஆகும். அத னால் சதுரங்க சாம்பியன் என்பவர் மற்ற விளை யாட்டுகளின் சாம்பியன்களை விடச் சிறப்பான வர் ஆவார். அப்படிப்பட்ட சாம்பியன் பட்டத்தை ஐந்துமுறை வென்றுள்ள ஆனந்த் பாராட்டுதலுக் கும் போற்றுதலுக்கும் உரியவர். அவருடைய சா தனையின் பலனாக, பொருளாதார ரீதியால் துவ ண்டு நிற்கும் இந்தியனின் நடை யில் ஒரு துள்ள லும், முகத்தில் ஒரு இறுமாந்த புன்னகையும் ஏற்பட்டுள்ளதென்றால் அது மிகையல்ல.உலகச் சாம்பியன் போட்டிகளின் மூன்று வடி வங்களிலும் சாம்பியன் பட்டம் வென்ற ஒரே வீரர் ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது. நாக் அவுட், சுழல் ஆட்டமுறை, தகுதிச் சுற்றில் வென்றுவரும் சவால் வீரருடன் ஆடும் முறை ஆகிய மூன்று வடிவங்களிலும் ஆனந்த் சாம்பி யன் பட்டத்தை வென்றுள்ளார்.
சவால் வீரருடன் மோதும் போட்டிகள் 2007 முதல் மீண்டும் நடை முறைக்கு வந்தபின் ஆனந்த் உலகச் சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு வருகிறார். 2008ல் ரஷ்யாவின் விளாடி மிர் கிராம்னிக்கையும் 2010ல் பல்கேரியாவின் டோப லோவையும் வீழ்த்தி வென்ற உலகச் சாம்பியன் பட்டத்தை ஆனந்த், இப்போது தக்க வைத்துக் கொண்டுள்ளார்.இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த் இந்திய சதுரங்கத்தில் உயிர்ப்பையும் துடிப்பையும் ஏற்படுத்தியவர் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்றா கும். அவருக்குப் பின்னர் இந்தியாவில் ஆடவரில் 25 கிராண்ட் மாஸ்டரும் மகளிரில் 12 கிராண்ட் மாஸ்டரும் உருவாகியுள்ளனர். கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சிக்குஉந்துதலும் உற்சாகமும் அளித்த முன்னோடி என்பது குறிப் பிடத்தக்கது.‘மின்னல் சிறுவன்’ என்றும், ‘சென்னைப் புலி’ என்றும் இளைய வயதில் அழைக்கப்பட்ட ஆனந்தின் வெற்றிக்கு தாயமிட்டு தொடங்கி வைத்தவர் அவருடைய தாயார் சுசிலா. அவ ருடைய தந்தை விஸ்வநாதன், தென்னக ரயில் வேயில் பொது மேலாளராக இருந்தவர். அவரு டைய பயணங்களிலும்போட்டிகளிலும்,சாய்ந்து கொள்ள உதவும் தோளாக அவருடைய மனைவி அருணா நிற்கிறார்.
ஐந்தாவது உலகப் பட்டம் வென்றவுடன் தன்னுடைய குடும்பத் தாரின் தியாகங்களை ஆனந்த் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.பொதுவாக வெற்றிகள் அகந்தையை, ஆண வத்தை உருவாக்கும் என்பார்கள். ஆனால் அப் படியொரு மாற்றத்தை மயிலாடுதுறையில் பிறந்த ஆனந்திடம் காணவில்லை. சதுரங்க வாழ்க்கை யில் காலடி எடுத்து வைத்த நாள் முதல் அன்று போல் இன்றும் அமைதியும் பொறு மையும் அடக் கமும் நிறைந்தவராகத் திகழ்கிறார். அவர் எந்த சர்ச்சையிலும் சிக்கியதில்லை.சர்வதேச அளவிலும், இந்தியாவிலும் அவர் பல விருதுகளை வென்றுள்ளார். பத்மவிபூஷண் விருது பெற்ற அவருக்கு, இந்திய விளையாட்டின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது நிறுவப்பட்ட முதல் ஆண்டிலேயே வழங் கப்பட்டது. எத்தனை விருதுகள் வழங்கப்பட் டாலும், அத்தனையையும் தாண்டி அவர் நிற்பார்.

Leave a Reply

You must be logged in to post a comment.