மிதிலேஷ் என்ற மத்தியப் பிரதேச கட்டிடத் தொழிலாளி (22) சென்னை நகரத் தின் அருகே உள்ள திருமுல்லைவாயலை அடுத்த அய்யப்பாக்கம் எனும் இடத்தில் இரண்டாவது மாடியில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து மாண்டு போனான். எந்தப் பாது காப்பும் இல்லாமல் உயரத்தில் நின்று பணி புரிய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளான். இத னால் குற்றவாளியான ஒப்பந்தக்காரர் வெங்க டேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேசத்திலிருந்து உழைத்துப் பிழைக்க வந்த இளைஞனின் வாழ்வு கேட் பாரற்று முடிந்து போனது.அதேபோல் சன்திப் குமார் மத்தியப் பிர தேசத்திலிருந்து வந்த 29 வயதுடைய இளை ஞன், தாம்பரம் அருகே உள்ள முடிச்சூரில் அபார்ட்மென்ட் கட்டும் முதலாளியிடம் ஒப் பந்த முறையில் பணிபுரிந்து வந்தான். கட்டிட வேலை நடக்கும் இடத்தின் அருகே கட்டப் பட்டுக் கொண்டிருந்த கழிவுநீர் பாறையில் மோதி ஸ்டீரிங்குக்கு இடையில் நெஞ்சு அழுந்தி மாண்டு போனான். வறுமையிலி ருந்து மீளவந்த வாலிபன், இரவு பகலாக உறக்கம் இன்றி ஜீப் ஓட்டிய காரணத்தால்கண் அசந்து கற்பாறையில் மோதிக் காலமானான்.
இங்கே இன்னொரு சோகம், மனவேத னையோடு, தாடியோடு, மேற்சட்டையில் லாது நடந்து போன ஒருவனை, சில காலிகள் வடநாட்டான் என்ற குரோதத்தில், திருட வந்தவன் என்று கூறி அவனை அடிக்க ஆரம் பிக்க, வேடிக்கைப் பார்த்த சிலரும் சேர்ந்து கண்மூடித்தனமாக நையப்புடைக்க, அவன் இந்தியில் எதையோ சொல்லிச் சொல்லி அலற, அடிப்போர் சொல்லும் தமிழ் அவனுக் குப் புரியாது போக, விளைவு, அவனை அடித்தே குத்துயிரும், கொலை உயிருமாய் வீதி ஓரத்தில் வீசி எறிந்துவிட்டார்கள். விசா ரணையில் தெரியவந்தது, அவன் வடநாட் டான் அல்ல, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கட் ராவ் என்பவன்.அண்டை மாநிலங்களிலிருந்து சிலர் கொள்ளையடிக்க வரலாம், திருட வரலாம். இது அங்கொன்றும், இங்கொன்றுமாக நடப்பது. இப்படி தமிழகத்திலிருந்தும் கூட அண்டை மாநிலத்துக்கு சிலர் திருடப்போவதும் உண்டு, பலர் பிழைக்கப்போவதும் உண்டு. திரு வண்ணாமலை, வேலூர், சேலம் போன்ற மாவட்டங்களிலிருந்து ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் அண்டை மாநிலமான பெங்களூருக்கு கட்டிட வேலைக்கு, மரவேலைக்கு போய் பிழைத்து வருவதும் இப்போதும் நடைபெறுகிறது.சென்னை நகரில் பெண்களின் கழுத்தில் உள்ள தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு மோட்டார் பைக்கில் ஓடி தப்பிக்கும் செய்திகள் வராத நாளில்லை. இவர்கள் அனைவரும் நம்நாட்டு இளைஞர்கள்தான். தமிழகத்தில் அன்றாடம் வழிப்பறி, வீடுபுகுந்து திருடுதல், கொலை, கொள்ளை நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நம் தமிழர்கள்தான் தம் தமிழர்களிடம் கொள்ளையடிக்கிறார்கள். யார் குற்றம் செய்தாலும் குற்றம் குற்றம்தான். இதில் வடநாட்டான், தென்னாட்டான் என்று இனம் பார்ப்பது சரியல்ல. இன்றைய ஆய்வுப்படி தமிழகத்தில் வட மாநிலங்களிலிருந்து பிழைக்க, வேலை தேடி வந்தவர்கள் 10 லட்சத்துக்கு மேல் உள்ளார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
நம்நாட்டுத் தொழிலாளர்கள் குறைந்த கூலி தரப்படுவ தாலும், ஆபத்தான வேலைகளில் ஈடுபட வைப்பதாலும் அப்படிப்பட்ட வேலைகளை மறுத்து விடுகிறார்கள். ஆனால், பிழைப்பு தேடி 600 கிலோ மீட்டர், 1000 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து, அதாவது அசாம், பீகார், ஒடிசா, வங்காளம், உத்தரப்பிரதேசம் இன்னும் சொல்லப்போனால் நேபாளம் போன்ற இடங் களிலிருந்து வறுமையிலிருந்து மீள, பிழைப் பைத் தேடி வருகிறவர்கள் இவர்கள். வேறு வழியில்லாமல் குறைந்த கூலிக்கு கடின மான, ஆபத்தான பணிக்கும் தயாராகிவிடுகி றார்கள். சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, ஓசூர், திருப்பூர், கன்னியாகுமரி எனப் பரவிக்கிடக்கிறார்கள். உலகமயம், தனியார் மயம், தாராளமயம் இந்தப் பாய்ச்சலை உரு வாக்கிவிட்டது. எட்டு மணி நேரம் வேலை என்பதற்கு கௌரவமாக சமாதி (னுநஉநவே க்ஷரசயைட) கட்டப் பட்டுவிட்டது. 10 மணி நேரம் கசக்கிப் பிழியப் படுகிறார்கள். வேலை செய்யப்படும் இடங் களிலேயே தங்க ஏற்பாடு, ஒரு நபருக்கு ‘6ஓ7’, இரண்டு நபருக்கு என்றால் ‘10ஓ10’ தகர கொட்டாய் அடித்துக் கொடுக்கப்படும், மொத்தமாக தங்கவும் தகடுகளால் வேயப்பட்ட நீண்ட இடம் உண்டு, இறுக்கமாகப் படுக்க வேண்டும். காற்று வசதி கிடையாது. கழிப்பிட வசதி கிடையாது. கால், கை அடிபட்டால், காய்ச்சல் என்றால் முதலாளி சார்பில் உதவி கிடையாது, சொந்தமாகத்தான் வைத்தியம் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களே பொங்கிச் சாப்பிட வேண்டும்.குடும்பஸ்தனாக வந்து விட்டால், குழந் தைகள் படிக்க ஏதும் வசதி கிடையாது, வேலை நடக்கும் இடங்களில், மணல் மேடு களில், கற்கள் குவியலில் திறந்த வெளியில் ஓடி ஆடி விளையாட வேண்டும், பொழுது போக்க வேண்டும், மனைவியும் வேலைக்குச் சென்றுவிட்டால் சிறிய குழந்தையைப் பெரிய குழந்தை பார்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி, பக்கத்தில் உள்ள உள்ளூர் காலிக ளால் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்துக்கு பலியாகும் கொடுமைகளும் நடப்பது உண்டு. யார் அவர்களுக்கு உதவி செய்வது. இவைகள் அனைத்தையும் சமாளித்துக் கொண்டு, சகித் துக் கொண்டு பிழைப்பை ஓட்ட வேண்டியவர் களாக அந்த அப்பாவி மக்கள் வாழ்கிறார்கள்.இரவு 7 மணிக்கு மேல் தைரியமாக அவர் கள் வெளியே செல்ல அஞ்சுகிறார்கள். ரோந்து (ஞயவசடிட) வரும் காவலர்கள் அவர்களை மடக்கி அடையாள அட்டை கேட்கிறார்கள், இல்லாது போனால் வேனில் தூக்கிப்போட்டுக் கொண்டு காவல் நிலையத்தில் பல மணி நேரம் விசாரணை, மிரட்டல், காசு பறித்தல் என நடந்து விடுகின்றன.இந்தியக் குடிமகன் இந்தியாவில் சுதந்திர மாக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், வாழலாம், பிழைக்கலாம். இந்திய அரசியல் சட்டம் தந்துள்ள உரிமை இது.
சுதந்திரம் இது.இதற்கு மேலாக, மற்ற ஓர் உச்சகட்ட கொடுமை என்பது, தொழிலாளிகளின் கூலி யைச் சூறையாடுவதுதான். 100 சதவீதம் லாபம் சம்பாதிப்பதுதான் அதன் நோக்கம். அதிர்ச்சி தரும் செய்தி, பெரிய பெரிய ஐ.டி நிறு வனங்கள் தங்களுக்கான வானளாவிய கட்டி டங்கள் கட்டுகிற போது, அங்கு பணிபுரியும் வேற்று மாநில தொழிலாளர்களுக்கு ஒரு வாரத் துக்கு ரூ.50தான் கூலியாகத் தருகின்றன. ஒரு நாளைக்கு ரூ.157 தருவதாக ஏற்றுக் கொண்ட நிறுவனம் வாரம் பூராவும் வேலை செய்ததற்கு ரூ.50 தான் தந்தது என்பதை யாரா லும் நம்ப முடியவில்லை. ஆனால் இது உண்மை. பி.எல் காஷ்யப் அண்டு சன்ஸ் லிமி டெட் (க்ஷ.டு முயளாலயb யனே ளுடிளே டுவன) எனும் இதய மற்ற கம்பெனிதான் இந்த கேவலத்தை செய் திருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த சுரண்டல் மோசடி, இப்படிப்பட்ட கட்டிடப் பணிகளில் பணியாற்றும் வேற்று மாநிலத் தொழிலாளர்களுக்கு கூட்டு பேர சக்தி இல்லை, சங்கமில்லை,அதிக கல்வியில்லை, ஆள்பலம் இல்லை. எனவே, தொழிலாளர்க ளைக் கொள்ளையடிக்கும் நிறுவனங்கள், ஒப்பந்த ஏஜெண்டுகள் ஐவேநச ளுவயவந ஆபைசயவே றுடிசமஅநn ஹஉவ (1979) என்பதை மதிப்பதே இல்லை. தூக்கி காற்றில் எறிந்து விடுகிறார் கள், உயர்ந்த கட்டிடங்கள், தாழ்ந்த உள்ளங்கள்.தமிழ்நாட்டில் தமிழ்நாடு கட்டிடத் தொழி லாளர்கள் நல வாரியம் உண்டு. ஆனால் இதில் பிற மாநில தொழிலாளர்கள் பதிவு செய் யப்படுவது இல்லை. அப்படி பதிவு செய்ய வேண்டுமென்றால், அவர்கள் அரசு மருத்துவ ரிடம் வயது சர்டிபிகேட் வாங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பரிசீலனை செய்ய வேண்டும்.ஒரு தொழிலாளி வேலை நேரத்தில் காயம் பட்டாலோ, விபத்தில் இறந்து விட்டாலோ மாநில தொழிலாளர் துறைக்குத் தகவல் கொடுத்து நஷ்ட ஈடு பெற வேண்டும். இதற்கு க்ஷரடைனiபே யனே டீவாநச ஊடிளேவசரஉவiடிn றுடிசமநசள ஹஉவ -1966 வழி செய்கிறது. ஆனால் இது அமல் படுத்தப்படுவதே இல்லை. இந்த மத்திய அரசு சட்டத்தை தமிழ்நாடு அரசும் தன் கெஜட்டில் 2006ம் ஆண்டில் வெளியிட்டு உள்ளது. ஆனால் நாளது தேதி வரை தமிழ்நாடு அரசு இதற்கான அதிகாரிகளை நியமித்ததா என்றால் அதுதான் இல்லை. பிற மாநிலத்தி லிருந்து வந்த இவர்களுக்கு ரேசன் கார்டு என்பது வெறும் முயற்கொம்பே. கிட்டத்தட்ட இவர்கள் நவீன கால கொத்தடிமைகள் என்று சொன் னாலும் இது மிகையான வர்ணனை அல்ல. இவர்களைக் குறைந்தபட்சம் மனிதர்களாக வாழ வைக்க மாநில அரசுக்கும் கடமை உண்டு.குடிபெயர்ந்து வந்து பணிபுரியும் இவர் களை தமிழ்நாடு அரசு சர்வே செய்ய வேண் டும். ஐவேநச ளுவயவந ஆபைசயவே ஹஉவ 1979-ன் கீழ் இவர் கள் கொண்டு வரப்பட்டு அந்த சட்டம் கட் டாயம் அமலாக வேண்டும்.க்ஷரடைனiபே யனே டீவாநச ஊடிளேவசரஉவiடிn றுடிசமநசள (சுநபரடயவiடிn டிக நுஅயீடடிலஅநவே யனே ஊடினேவைiடிn டிக ளுநசஎiஉந) ஹஉவ 1996. இந்தச் சட்டம் அமல்படுத் தப்பட்டு பாதுகாப்பான பணிக்கு உத்தரவாதப் படுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு இதன் அடிப்படையில் வெளியிடப்பட்ட விதிகள்படி தொழிலாளர் மாண்டாலோ, காயம் பட்டாலோ ( றுடிசமஅநn’ள ஊடிஅயீநளேயவiடிn ஹஉவ 1923) உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.மாநிலத்தை விட்டு தமிழகத்தில் குடி பெயர்ந்த அனைத்து தொழிலாளர்களும் கட்டா யம் தமிழ்நாடு கட்டிடத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். குடி யிருக்க ஒழுங்கான வீடு, குழந்தைகள் காப் பகம், கல்வி வசதி, ஊட்டச்சத்து திட்டம் இவர் கள் வாழும் இடங்களில் அமல்படுத்தப் பட வேண்டும்.நுளூரயட சுநஅரநேசயவiடிn ஹஉவ இவர்களுக்கும் அமலாக வேண்டும். அல்லாது போனால், இவர்கள் கொத்தடிமைகள் என்று அர்த்தமாகி விடும். அப்படியானால், கொத்தடிமைகள் என்பது சட்டப்படி பெரும் குற்றமாகும்.
இதற்கு தமிழ்நாடு அரசு இடம் கொடுக்கக்கூடாது. தற் காலிக ரேசன் கார்டுகள் வழங்கப்பட வேண்டும்.தபால் மூலம் வாக்களிக்க (ஞடிளவயட க்ஷயடடடிவ) உரிமை வழங்கப்பட வேண்டும். வாக்களிக் கும் உரிமை மறுக்கப்படக்கூடாது என்பது சட்டமல்லவா? கூயஅடையேனர ஆயரேயட ஹஉவ 1982 கீழ் இவர்க ளுடைய பணி ஒழுங்குபடுத்தப்பட வேண் டும். இந்தப்பணியை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம்தான் பொறுப்பு எடுத்து அமலாக்க வேண்டும்.ஆதாரம் : வலைத்தளம்

Leave A Reply

%d bloggers like this: