தஞ்சாவூர், ஜூன் 1-இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை எதிர் த்து பொதுமக்கள் கருத்துக் களை திரட்ட உள்ளதாக தஞ்சையில் நடந்த கருத்த ரங்கில் தென் மண்டல இன் சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்தார். அரசு பொது காப்பீட்டு நிறுவனங்களின் பங்குகளை விற்கும் மத்திய அரசின் முயற்சியை எதிர்த்து மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங் கத்தின் தஞ்சை, நாகை, திரு வாரூர் மாவட்டக்குழுக்கள் சார்பில் தஞ்சை சரோஜ் நினைவகத்தில் கருத்தரங் கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு மாவட்டச் செயலாளர் சத்தியநாதன் தலைமை தாங்கினார். நேசனல் இன் சூரன்ஸ் கோட்ட மேலாளர் ராமகிருஷ்ணன், யுனெ டெட் இந்தியா இன்சூ ரன்ஸ் கோட்ட மேலாளர் அழகர் ராஜ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் கோட்ட மேலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் ஜவஹர் வர வேற்புரையாற்றினார். எல்ஐசி ஊழியர் சங்க தஞ்சை கோட்ட செயலா ளர் எஸ்.செல்வராஜ், ஓரி யண்டல் இன்சூரன்ஸ் அதி காரிகள் சங்க நிர்வாகி சந் திரசேகர், பொது காப்பீட்டு வளர்ச்சி அதிகாரிகள் சங்க நிர்வாகி ராஜரத்தினம், மண்டல இணைச் செயலா ளர் ராஜ மகேந்திரன், பொது காப்பீட்டு முகவர்கள் சங்க நிர்வாகி பெரியண்ணன் ஆகியோர் பேசினர். மாவட்ட இணைச் செயலாளர் கரு ணாநிதி நன்றி கூறினார்.கருத்தரங்கில் பொதுச் செயலாளர் ஆனந்த் பேசு கையில், கடுமையான போட்டி நிலவுகின்ற சூழலில், அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவ னங்கள் தனியார்களிடம் தாரை வார்க்கப்பட்டால் இந்தியப் பொருளாதாரம் வீழ்வதும், இந்திய மக்களின் சேமிப்பு கொள்ளை போகின்ற அபாயமும் ஏற் படும். எனவே இந்த சட்ட மசோதாவை எதிர்த்து பொது மக்களின் கருத்துக் களை திரட்டவுள்ளோம் என்று குறிப்பிட்டார். இக்கருத்தரங்கில் ஏராள மான ஊழியர்கள், அதிகாரி கள் பல்வேறு தொழிற்சங் கங்களின் முன்னணி நிர் வாகிகள் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: