புதுதில்லி, ஜூன் 1-பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டு முதலீடை மேம்படுத்த வரி தகவல் பரி மாற்ற ஒப்பந்தத்தை இந்தியாவும், பக்ரை னும் வியாழக்கிழமை அறிவித்தன. இரு நாடுகள் இடையேயான வர்த்தக உறவை 170 கோடி டாலரில் இருந்து மேலும் அதி கரிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஒப்பந்தத்தில் இளவரசர் சல்மான் பின் ஹமத் அல்-அலிபா தலைமையிலான குழு வும், பக்ரைன் வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு கையெழுத்திட்டன. சல் மான் பின் பக்ரைனில் பட்டத்து இளவர சர் மற்றும் பக்ரைன் பொருளாதார மேம் பாட்டு அமைப்பில் தலைவராகவும் உள்ளார்.வரி தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்திற்கு மேலாக குறிப்பிட்ட வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இதில் பக்ரைன் வர்த்தக அமைப்பு மற்றும் இந்திய தொழில் கூட்ட மைப்புக்கு (சிஐஐ) இடையிலும் பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது.ஒப்பந்தம் உடனடி செயல்பாட்டுக்கு வந்தது. இதன்படி தொடர் சந்தை தகவல் பரிமாற்றம், தொழில் வாய்ப்புகள் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்த பொருளாதாரக் குழு முதலீடு மற்றும் வர்த்தக பரிமாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்ப உறவுகள் இந்தியா-பக்ரைன் இடையே மேம்பட, இந்தியா-பக் ரைன் வணிக குழுவும் அறிவிக்கப்பட்டது. மின்னணு வர்த்தகம், மின்னணு நிர்வாகம், தகவல் பாதுகாப்பு தொடர்பாகவும் ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய வணிகங் கள் வளைகுடா சந்தையை தொடர்பு கொள்ள முடியும். இந்த கூட்டு ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் நிபுணத்துவம் மூலம் பயன்பெறுவோம் என பக்ரைன் போக்குவரத்து துறை அமைச்சர் கமால் பின் அகமது கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.