திருப்பூர், ஜூன் 1-வரலாறு காணாத அளவு உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு வெள்ளியன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் அப்துல் நாசர் தலைமை தாங்கினார். மாவட்டப் பொதுச் செயலாளர் முஜிபுர் ரகுமான் முன்னிலை வகித்தார். எஸ்.டி.பி.ஐ. மாவட்டத் தலைவர் அமானுல்லா கண்டன உரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply