வாஷிங்டன், ஜூன்.1-அமெரிக்க அதிபர் தேர் தல் வரும் நவம்பர் மாதம் 6ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இரண்டா வது முறையாக தற்போ துள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா போட்டி யிடுகிறார்.இதையடுத்து ஒபாமா வை எதிர்த்து போட்டியி டும் குடியரசு கட்சி வேட் பாளர் யார் என்பதை தேர்வு செய்யும் வாக்கெடுப்பு அந்த குடியரசு கட்சிக்குள் நடை பெற்று வந்தது. இதில் அமெரிக்காவில் உள்ள பெரும்பான்மையான மாகாணங்களில் நடை பெற்ற வாக்கெடுப்பில் மிட் ரோம்னியே முன்னிலை வகித்து வந்தார். இந்நிலை யில் டேக்சா மாகாணத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பி லும் குடியரசு கட்சி உறுப் பினர்கள் மிட்ரோம்னி யையே தேர்வு செய்தனர். இதனால் இவரே ஒபாமா வை எதிர்த்து போட்டியிடு வார் என எதிர்பார்க்கப்படு கிறது. குடியரசு கட்சிக்குள் அதிபர் வேட்பாளராக 4 பேர் போட்டியிட்டனர். குடியரசுக் கட்சியின் ஜனா திபதி வேட்பாளர் தேர்த லில் போட்டியிடுபவர்க ளில் குறைந்தது 1144 வாக் குகள் பெற்றவர் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப் படுவார். தற்போது நடை பெற்ற தேர்தலில் மிட்ரோம் னியை 1183 பேர் ஆதரித்தனர். அதன்படி தற் போது வரை மிட்ரோம் னியே குடியரசு கட்சியின் சார்பாக போட்டியிடும் அமெரிக்க அதிபர் வேட்பா ளர் என நம்பப்படுகிறது. இருப்பினும் ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி புளோ ரிடாவில் நடக்கும் குடியரசு கட்சி கூட்டத்தில்தான் அதி காரப்பூர்வ வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.இந்நிலையில் அமெ ரிக்க ராணுவத்தினரிடம் அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்று நடத்திய கருத்துக்கணிப்பில் 58 சதவி கிதத் தினர் மிட்ரோம்னி யையே தேர்வு செய்துள்ள னர். 34 சதவிகிதம் பேர் மட் டுமே ஒபாமாவை தேர்வு செய்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.