திருவனந்தபுரம், மே 31 -ஹரப்பா நாகரிகம் பல நூறு ஆண்டுகள் வட மேற்கு இந்தியாவின் பரந்த பகுதி முதல் பாகிஸ்தான் முழுவதும் பரவியிருந்தது.அந்த நாகரிகத்தின் வளர்ச்சியிலும் வீழ்ச்சியி லும் பருவமழை முக்கிய அங்கம் வகித்துள்ளது. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஹரப்பா நாகரிகம் திடீரென சரிவு கண்டு மறைந் துள்ளது. பருவநிலை மாற்றத்தால் தண்ணீர் போதிய அளவு கிடைக்காததால் இந்த நாகரிகமும் வீழ்ச்சி அடைந்துள்ளது என விஞ் ஞானிகள் கூறுகின்றனர்.இதுதொடர்பாக தேசிய அறிவியல் கழக செயல்பாடு கள் (பிஎன்ஏஎஸ்) அமைப் பில் உள்ள அமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான், இந்தியா, ருமேனியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு வினர் ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளனர். பருவ மழை பெய்வதில் ஏற்பட்ட மாற்றத்தால் ஆற்று நீரோட் டம் மாறி உள்ளது. பருவ நிலை மாற்றம் துவக்கத்தில் ஹரப்பா நாகரிகம் செழித்து வளர உதவினாலும் பின் னர், அது வீழ்ச்சியடைய காரணமாக இருந்துள்ளது என அந்த ஆய்வு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.
தற் போதுள்ள மழைப்பொழி வைக் காட்டிலும், 10 ஆயி ரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய உபகண்டத்தில் பருவமழைப் பொழிவு மிக அதிகமாக இருந்துள்ளது எனஅகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய் வகத்தின் ஆர்.ரமேஷ் கூறுகி றார். அவர் கடந்த கால பருவ நிலை மறுகட்டமைப்பு குறித்து பணியாற்றுகிறார்.பருவமழை கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்த நிலையில் உபகண்டத்தில் வடமேற்கு பகுதியில் மழைப் பொழிவு குறைந்தது. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மாற்றம் ஏற் பட்டது. ஹரப்பா நாகரிகத்தை நதிச் செயல்பாடு எவ்வாறு பாதித்துள்ளது என்பதை விஞ்ஞானிகள் ஆய்வுசெய் தபோது, இந்த பிராந்தியத் தில் 4,500 ஆண்டுகளுக்கு முன்னர் தீவிர மழைப்பொ ழிவு குறைந்து, நதிகளில் ஏற்படும் வெள்ள அபாயம் குறைந்தது. அத்தகைய நிலையில் வேளாண்மை துவக்கத்தில் நல்ல வளர்ச்சி காணப்பட்டது. 4 ,500 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த வளர்ச்சி படிப்படி யாக வீழ்ச்சியடைந்தது. அதன் பின்னர் 500 ஆண் டுகள் நகர்ப்புற வளர்ச்சி கொழித்தது. பருவநிலை மாற்றம் காரணமாக நகரங் களுக்கு உதவியாக இருந்த பின்தங்கிய பகுதிகளின் வேளாண்மையிலும் வீழ்ச்சி ஏற்பட்டது என, சென்னை கணித அறிவியல் நிறுவனத் தின் விஞ்ஞானி ரோனோ ஜாய் அதிகாரி கூறினார். ஆய்வு அறிக்கை குழுவில் இவரும் இடம்பெற்றுள் ளார். 2004ம் ஆண்டு, ஜவகர் லால் நேரு பல்கலைக்கழ கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜாமணி மற்றும் இரண்டு ஜெர்மனி விஞ்ஞானிகள் பருவநிலை மாற்றம் தொடர்பான ஆய்வு அறிக்கையை ‘கரன்ட் சயின்ஸ்’ இதழில் வெளியி ட்டிருந்தனர். இந்த விவரத்தை பிஎன் ஏஎஸ் ஆய்வு அறிக்கை தங்களுக்கு ஆதாரமாக எந்த வொரு ஆவணத்தையும் குறிப்பிடவில்லை.

Leave A Reply