விருதுநகர், மே 31-விருதுநகரில் ரயில் மறி யல் போராட்டம் நடத்திய வர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமான தாக்கு தல் நடத்தியது.மத்திய அரசு திடீரென பெட்ரோல் விலையை ரூ.7.50 உயர்த்தியது. இத னால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளனர். இந்நிலையில் சிஐடியு, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாண வர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் விருதுநகர் மாவட் டம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்பட் டது. இதில் கலந்து கொண் டவர்களை காவல்துறை கைது செய்தது. மாவட்டம் முழுவதும் 111 பெண்கள் உட்பட 521 பேர் கைதாகி னர். விருதுநகரில் ரயில் மறி யல் போராட்டம் அறிவிக் கப்பட்டது. அதன்படி, விருதுநகர் ரயில் நிலையத் திற்குள் வந்த செங்கோட்டை -மதுரை ரயில் முன்பு அமர்ந்து அமைதியான முறையில் மறியல் போராட்டம் நடத் தினர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த ஏ.டி.எஸ்.பி சாமிநாதன், காவல் ஆய் வாளர் குருவெங்கட்ராஜ் ஆகியோர் போராட்டம் நடத்த விடாமல் தடுத்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக் கட்டாயமாக இழுத்தனர். பின்பு, அனைவரையும் லத் தியால் கடுமையாக தாக் கினர். இதில் பலர் காய மடைந்தனர். அதன் பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் அனைவரையும் காவல்துறை கைது செய் தது. காவல்துறை தாக் கியதில் மாணவர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பாரதி, வட்டச் செயலாளர் ரஞ்சித், வாலிபர் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் ஆனந்த், நகர்குழு உறுப் பினர் பிரான்சிஸ், பாண் டீஸ்வரன்,சிந்தன் ஆகி யோர் படுகாயமடைந்தனர்.
சிபிஎம் கண்டனம்
இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் அ.சேகர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-விருதுநகரில் அமைதி யான முறையில், ஜனநாயக ரீதியில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தை நடத்தவிடாமல் காவல் துறை தடியடி நடத்தியுள் ளது. போராட்டத்தின் போது காவல்துறை நடந்து கொண்ட விதம் மிகவும் மோசமாக உள்ளது. மறி யலில் கலந்து கொண்ட வாலிபர் சங்கத்தினரின் தலைமுடியை பிடித்து இழுத்துள்ளனர். பலரை கொடூரமாக தாக்கியுள் ளனர். படுகாயமடைந்த 6 பேருக்கு சிகிச்சை தருகி றோம் என ஆய்வாளர் குரு வெங்கட்ராஜ் அழைத்துச் சென்றார். ஆனால் அவர் களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் பஜார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார். பின்பு, மேற்கு காவல் நிலையத் திற்கு தனி காரில் கொண்டு சென்றார். அதற்கு பிறகும் சிகிச்சை தரவில்லை. ஒரு மணி நேரம் கழிந்ததும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம் என்ற பெயரில் வண்டியில் வைத்து ஊரை மட்டுமே சுற்றி விட்டு, காவல் நிலை யத்திற்கே மீண்டும் கொண்டு வந்துள்ளார். படுகாய மடைந்தவர்களுக்கு முதலு தவி சிகிச்சை கூட தராமல் பல மணி நேரம் காவல் நிலையத்தில் காத்து கிடக்க வைத்துள்ளனர். இது காவல் துறையின் மனிதாபிமான மற்ற செயலை காட்டுகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை காவல்துறை கிரி மினல் குற்றவாளிகளை விட மோசமாக நடத்தியுள் ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம் எனக் கூறியுள்ளார். முன்னதாக நடைபெற்ற இப் போராட்டத்திற்கு மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி தலை மையேற்றார். மாவட்டச் செயலாளர் எஸ்.லட்சுமி, சிஐடியு கன்வீனர் எல்.முரு கன், மாணவர் சங்க மாவட் டச் செயலாளர் வீ.மாரி யப்பன், வாலிபர் சங்க நகரச் செயலாளர் பி.ராஜா, தினேஷ் உட்பட பலர் பங் கேற்றனர்.
கண்டனம்
விருதுநகரில் காவல் துறையினர் நடத்திய தாக்கு தலை மாதர் சங்க தலைவர் கள் என்.அமிர்தம், பி.சுகந்தி, வாலிபர் சங்க தலைவர்கள் செ.முத்துக்கண்ணன், ஆர். வேல்முருகன், மாணவர் சங்க தலைவர்கள் கே.எஸ். கனகராஜ், ஜோ.ராஜ் மோகன் ஆகியோர் வன்மை யாகக் கண்டித்துள்ளனர்.பாராட்டுபெட்ரோல் விலை உயர் வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நடைபெற்ற மறியல் போராட்டங்களில் 199 மையங்களில் மொத்தம் 2800 பெண்கள் கலந்து கொண்டு கைதாகினர். நாகை, திருவாரூர் மாவட் டங்களில் பெருந்திரளான பெண்கள் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்ற இப்பெண்களுக்கு மாதர் சங்க தலைவர்கள் பாராட் டுத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.