புதுதில்லி, மே 31-அமெரிக்காவின் கடும் எதிர்ப்பு ஈரான் மீது இருந்தாலும் வடக்கு-தெற்கு போக்குவரத்து மையமாக ஈரான் உருவெடுத்து வருகிறது. 16 நாடுகளின் நிபுணர்கள் பங்கேற்ற 3 நாள் கூட்டத் தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.ஈரான் வழியாக பல நாடுகள் பய ணப்பாதைத்திட்டத்தால் ஒரு முனை யான இந்தியாவில் இருந்தும் மற் றொரு முனையான மத்திய ஆசியா மற் றும் ரஷ்யா இடை யேயான சரக்கு போக் குவரத்து நேரம் வெகுவாக குறையும்.சர்வதேச வடக்கு தெற்கு பயணப் பாதை (ஐஎன்எஸ்டிசி) குறித்து 6 துணை பயணப்பாதை விவாரங்களு டன் 16 நாடுகளின் பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தினர். சில்க் சாலை வழியாக போக்குவரத்தை இயக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் நிர்ப்பந்தம்ஆகும். ஈரானின் பீடே நோய்ரே பகுதியை புறக்கணிக்கும் விதமாக அமெரிக்கா இந்த பரிந்துரை யை அளித்தது.கடுமையான முரண்பாடு இருந்த போதும் பல நிலை வடக்கு-தெற்கு பாதையாக அந்த நாட்டின் பந்தர் அப் பாய் துறைமுகம் திகழ உள்ளது.பல்வேறு விஷயங்களுக்கு தீர்வு காண 2 நான்கு நாடுகள் குழுவை நி யமிக்க வேண்டும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஈரான், இந்தியா, ரஷ்யா இத்திட்டத்திற்கு முயற்சி எடுத்தன. இந்த நாடுகள் இரண்டு குழுக்களிலும் இடம்பெற் றுள்ளன. புதன் கிழமையன்று ஐஎன் எஸ்டிசி பேச்சுவார்த்தை முடிவடைந் தது. ஈரான் தரப்பு கூறுகையில், 372 கி.மீ. காஸ்வின் ராஷ்த் அஸ்தரா ரயில் பாதை முழுமை யடையும். ஒப்பந்ததாரர் ராஷ்த் -அஸ்தரா பாதையில் 163 கி.மீ. தூரத்தை கண் டறிந்து உள்ளார் என தெரிவித்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.