ஈரான், மே 31-உற்பத்தி செய்யப்படும் யுரேனியத்தில் 20 சதவிகிதத்தை செறிவூட்ட எங்களுக்கு உரிமை இருக்கிறது என்று ஈரான் அதிபர் முகமது அகமதி நிஜாத் பிரான்ஸ் செய்தி நிறுவனத் திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது: சர்வதேச அணுசக்தி முகமையின் விதிகளின்படி யுரேனியத்தை செறிவூட்டும் நாடுகள் செறிவூட்டிய யுரேனியம் 20 சதவீதத்தை ஈரா னுக்கு முன் நிபந்தனையின்றி வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் வழங்கவில்லை. எங்களின் தேவையை சர்வதேச விதிமுறைகளின்படி ஏற்கனவே தெரிவித்து இருக்கிறோம். ஆனாலும் வழங்கவில்லை. ஆனால் ஏஐஇஏ – யின் விதிமுறைகளின் படியே நாங்கள் உற்பத்தி செய்யும் யுரேனியத்தில் 20 சதவிகிதத்தை செறிவூட்ட எங்க ளுக்கு உரிமை இருக்கிறது. ஆனாலும் நாங்கள் அவ்வாறு செய்ய வில்லை. சம்பந்தப்பட்ட நாடுகள் ஈரானுக்கு செறி வூட்டப்பட்ட யுரேனியத்தை வழங்க முன்வர வேண்டும். அதுவே ஆக்கபூர்வமான ஒத்துழைப்பாக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தேவை என்றாலே, அது அணுகுண்டு தயாரிப்பதற்கு என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: