மக்களின் நம்பிக்கை
சிம்லா மேயர் மற்றும் துணைமேயர் பதவிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது சிம்லா மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இந்த வெற்றி பிரதிபலிக்கிறது.வருத்தம் என்னவென்றால், இந்த செய்தியை தீக்கதிரைத் தவிர மற்ற செய்தி ஊடகங்கள் வெளியிடவில்லை. மக்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்கு அளித்துள்ள ஆதரவை ஏற்றுக்கொள்ள முடியாமல் முதலாளித்துவ ஊடகங்கள் செய்திகளை இருட்டடிப்பு செய்து விட்டன.- ஆர்.டெரிக் எக்பெர்ட், மார்த்தாண்டம்

கட்டாயவழிப்பறி
பிள்ளைகளின் கல்விக்காக பெற் றோர் கடன்பட்டு தடுமாறும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. கல்விக் கொள் ளையர்கள் பல குடும்பங்களை ஏழ்மை நிலைக்குத் தள்ளுகிறார்கள். கல்விக் கட்டணம் என்ற பெயரில் அவர்கள் ஒருவிதமான கட்டாய வழிப்பறியை, அப்பட்டமான திருட்டை நடத்துகிறார்கள். அரசின் கல்விக்கடன் கூட, பெரும்பாலும் தனியார் கல்வி நிறுவன தாளாளர் களின் சுகபோகங்களுக்குத்தான் போகிறது. கல்வி தருவது அரசுகளின் கடமை என்பதை மக்கள் உணர்த்த வேண்டும். கல்விக் கட்டணக் கொள் ளையை தடுத்து நிறுத்துவோம்.- எஸ்.சுப்பையா, திருநகர்

புளுகுணி அரசாங்கம்
கோவையில் தோழர் பிருந்தா காரத் ஆற்றிய உரையை படித்தேன். அதில், “பொய் சொல்லும் அரசாங்கம்; புளுகுணி அரசாங்கம்” என்று மன் மோகன் அரசாங்கத்தை அழைத்திருந் தார். அது எவ்வளவு பொருத்தமானது என்பதை தீக்கதிரில் வெளியான பி.சாய்நாத் அவர்களின் “இதற்குப் பெயர் சிக்கனமாம்” என்ற ‘தி இந்து’ கட்டுரையின் தமிழாக்கமும் எடுத்துக் காட்டுகிறது.- சுத்தியன்,வேலாயுதம்பாளையம்

பதவிபடுத்தும்பாடு
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை, தனியார் கம்பெனி களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று 2002-ல் பாஜக அரசாங்கம்தான் முடிவெடுத்தது. அந்த அரசாங்கத்தி லும் திமுக பங்காளியாக இருந்தது. அந்த முடிவைத்தான் மத்திய காங் கிரஸ் தலைமையிலான மன்மோகன் சிங் அரசு அமல்படுத்தியது. இந்த அரசாங்கத்திலும் திமுக பங்காளியாக இருக்கிறது. எனவே, திமுகவுக்கு இந்த விலை உயர்வில் ஆதியோடு அந்த மாக தொடர்பு உள்ளது. அப்படி யிருக்க, எனக்கும் அதற்கும் சம்பந் தமே இல்லை என்று திமுக கூற முடியாது.ஆனால், பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தி திமுக நாடகமாடுகிறது. இந்த போராட்டத்திலும் கூட “மத்திய அர சுக்கு ஆதரவை திரும்பப் பெறு வோம்” என்று பேசிய திமுக தலைவர், அடுத்த சில நிமிடங்களிலேயே, “கசப்புடன் கூட்டணியில் தொடர் வோம்” என்று அந்தர் பல்டி அடிக் கிறார். அந்த அளவிற்கு திமுகவை, பதவி பாடாய்ப் படுத்துகிறது.- கூ.போர்விஜயன்,கடலூர்

மிரட்டும்கொசு வேகம்
விலை உயர்வு ஒரு பக்கம் மக் களை அச்சப்படுத்திக்கொண்டிருக் கும் நிலையில், கொசுவும் தன் பங்கிற்கு மக்களை மிரட்டி வருகிறது. தென் மாவட்டங்களில் குறிப்பாக திரு நெல்வேலி, சங்கரன்கோவில் உள் ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்ச லுக்கு 28 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற மாவட்டங்களையும் சேர்த்து மொத்தம் தமிழகத்தில் 34 பேர் உயி ரிழந்துள்ளனர். மாவட்ட மருத்துவ மனைகளில் 1867 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரு கின்றனர். ஆனால், இந்த நோய் பரவும் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகை யில் தமிழக அரசின் மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறை போன்றவை களின் நடவடிக்கை இல்லை. மக்கள் வந்து சேரும் பஸ் மற்றும் ரயில்வே ஸ்டேசன்களில் நோய்த் தொற்றுடன் வருபவர்களை கண்டறிந்து உடனடி யாக மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவக்குழுக்கள் 24 மணி நேரமும் இயங்க ஏற்பாடு இல்லை. மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படவில்லை. திறவை சாக் கடைகள் தூர்வாரும் ஏற்பாடு இல்லை. தமிழக அரசு டெங்குவை எப்படிக் கட்டுப்படுத்தப்போகிறது?- வில்சன் பாக்கியராஜ்,தூத்துக்குடி

Leave A Reply

%d bloggers like this: