திருப்பூர், மே 31-மத்திய அரசு அநியாயமாக உயர்த்தியுள்ள பெட்ரோல் விலையேற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்த முழு அடைப்பு, பொது வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக திருப்பூர் நகரம் வியாழனன்று முழுமையாக முடங்கியது.திருப்பூரின் உயிர்நாடியான பனியன் தொழில் நூறு சதவிகிதம் இயங்கவில்லை. உள்நாட்டுப் பிரிவு, ஏற்றுமதி பிரிவு மட்டுமின்றி பனியன் தொழிலின் அனைத்து சார்புத் தொழிற்சாலைகளும் முழுமையாக மூடப்பட்டன. ஜவுளித் தொழில் கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில் மத்தியஅரசு கண்மூடித்தனமாக விலையேற்றம் செய்திருப்பது இந்த தொழிலை நாசமடையச் செய்யும் என்பதால் இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்த போராட்டத்துக்கு டீமா உள்ளிட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில் புதுத்திருப்பூர், சிட்கோ தொழிற்பேட்டைகள் என அனைத்து பகுதிகளிலும் தொழில் நிறுத்தப்பட்டது.
அத்தோடு ஆட்டோ, தனியார் சரக்கு வாகனங்களும் முழுமையாக இயங்கவில்லை.நகரின் பிரதான வர்த்தக மையங்களாகத் திகழும் புதுமார்க்கெட் வீதி, பழைய மார்க்கெட் வீதி, குமரன் சாலை, காதர்பேட்டை, மாநகராட்சி வீதி என அனைத்துப் பகுதிகளிலும் ஜவுளி, மளிகை, நகைக்கடைகள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், ஹார்டுவேர் கடைகள் என பலவித வர்த்தக நிறுவனங்களும் முழுமையாக மூடப்பட்டுக் கிடந்தன.நகரின் தொழில், வர்த்தக நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்ட நிலையில் அரசுப் பேருந்துகள் மட்டும் குறைந்த எண்ளணிக்கையில் இயக்கப்பட்டன. தனியார் பேருந்துகள் ஒரு சில மட்டும் இயக்கப்பட்டன. எனினும் பெரும்பான்மையான பேருந்துகள் இயங்கவில்லை. எனவே பொதுப் போக்குவரத்தும் மிகப்பெருமளவு முடங்கியது.
சிபிஎம் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் குடிமங்கலம் நால் ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கமிட்டி உறுப்பினர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். சின்னப்பன், கனகராஜ், பசுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் தாலுகா செயலாளர் வெ.ரங்கநாதன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் என்.சசிகலா, அ.பஞ்சலிங்கம் ஆகியோர் உரையாற்றினர். மேலும் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து குடிமங்கலம் வட்டாரத்தில் முழுமையான கடையடைப்புப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.அதேபோல் கணியூரில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இல.கார்த்திகேயன் தலைமை வகித்தார். மனோகரன், முத்துசாமி, பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் கட்சியின் மடத்துக்குளம் தாலுகா செயலாளர் வெ.ரங்கநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் என்.சசிகலா, விவசாயிகள் சங்கத் தலைவர் எம்.எம்.வீரப்பன், கமிட்டி உறுப்பினர்கள் டி.சுப்பிரமணி, செல்லதுரை ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் திரளானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.
மோட்டார் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக சிஐடியு திருப்பூர் மாவட்ட மோட்டார் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன், மோட்டார் சங்க மாவட்டச் செயலாளர் ஒய்.அன்பு, சங்கத்தின் உதவித் தலைவர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் உரையாற்றினர். இதில் சங்க நிர்வாகிகள் மூர்த்தி, தண்டபாணி, ஜெயக்குமார், திருப்பதி உள்பட திரளான மோட்டார் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாவட்டம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட சுமார் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கைதாகினர்.நாமக்கல் அண்ணா சிலை அருகில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மறியல் நடைபெற்றது. போராட்டத்திற்கு இடைக்கமிட்டி செயலாளர் வி.பி.கருணாநிதி தலைமை வகித்தார். கொல்லிமலை செம்மேடு தபால் அலுவலகம் முன் சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.கே.மாணிக்கம் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் வி.கே.ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கைதாகினர்.நாமகிரிப்பேட்டை கனரா வங்கி முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மறியல் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் பி.செல்வராஜ் தலைமையில் வகித்தார். முன்னதாக பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று கனரா வங்கி முன்பு மறியலில் ஈடுபட்டனர். ராசிபுரம் கனரா வங்கி முன்பு சிபிஎம் ஒன்றிய செயலாளர் எஸ்.கந்தசாமி, சிபிஐ நகர செயலாளர் மணிமாறன் ஆகியோர் தலைமையில் மறியல் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். புதுச்சத்திரம் ஒன்றியம் திருமலைப்பட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் எ.பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.துரைசாமி, ஒன்றிய செயலாளர் ஜோதி உள்ளிட்ட ஏராளமானோர் மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.பரமத்தி வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் தாலுகா செயலாளர் கே.தங்கமணி, சிபிஐ மணி ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னதாக மோகனூர் சாலையிலிருந்து ஊர்வலமாகச் சென்று தபால் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டு ஏராளமானோர் கைதாகினர். எலச்சிபாளையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ந.வேலுசாமி தலைமை வகித்தார்.
ஒன்றிய செயலாளர் சு.சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.பள்ளிபாளையத்தில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் எம்.அசோகன், சிபிஐ ஒன்றிய செயலாளர் ஆர்.கே.நல்லப்பன் தலைமையில் மறியல் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். கொக்கராயன்பேட்டையில் மாவட்டக்குழு உறுப்பினர் கே.மோகன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம் கல்லங்காட்டு வலசில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பெருமாள் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் எஸ்.தனபால் உள்ளிட்ட ஏராளமானோர்பங்கேற்று கைதாகினர்.திருச்செங்கோடு ஒன்றியம் ஆனங்கூரில் செயலாளர் ஆர்.தங்கவேல் தலைமையில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எ.ஆதிநாராயணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் எம்.சிவானந்தம் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பட்டத்தில் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: