புதுதில்லி, மே 31-பெட்ரோல் விலை உயர் வை திரும்பப்பெற வலியுறுத்தி யும், மக்கள் மீது தாங்க முடி யாத சுமையை ஏற்றிய காங் கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அர சைக் கண்டித்தும் நாடு முழுவ தும் வலுவான எதிர்ப்பினை மக்கள் தங்களது போராட்டத் தின் வாயிலாக பதிவு செய் தனர். இடதுசாரிக்கட்சிகள் விடுத்த அழைப்பின்பேரிலும், இதர எதிர்க்கட்சிகள் விடுத்த அழைப்புகளின் பேரிலும் மே 31ம் தேதி பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான கண்டன நாள் பல்வேறு மாநிலங்களில் ஆவேசத்துடன் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரிக்கட்சிகளின் அழைப்பின் பேரில் தலைநகர் தில்லியிலும் நாட்டின் அனைத்துப்பகுதிகளிலும் கடையடைப்பு, ஆர்ப்பாட் டம், பேரணி, சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் என பல் வேறு வடிவங்களில் பல்லா யிரக்கணக்கானோர் போராட் டத்தில் ஈடுபட்டனர். இடதுசாரிக்கட்சிகள் மற் றும் எதிர்க்கட்சிகளின் அழைப்பின் பேரில்ஆந்திரப் பிரதேசம், பீகார், உத்தரப்பிர தேசம், மகாராஷ்டிரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் முழுமை யாக பந்த் போராட்டம் நடை பெற்றது.
மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்தது.திரிபுராவில் இடதுமுன் னணியின் அழைப்பின்பேரில் முழு அடைப்பு வெற்றிகரமாக நடைபெற்றது. சாலைகள் வெறிச்சோடிக்கிடந்தன. அலு வலகங்கள் எதுவும் இயங்க வில்லை. கேரளத்தில், பெட்ரோல் விலையை உயர்த்திய மறுநாளே முழு அடைப்புப்போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத் தக்கது. கண்டன நாளை யொட்டி மாநிலம் முழுவதும் பேரணிகள், ஆர்ப்பாட்டங் கள் நடைபெற்றன. இடதுஜன நாயக முன்னணி சார்பில் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் மாபெரும் போராட்டங்கள் நடந்தன.மேற்குவங்கத்தில் இடது முன்னணி சார்பில் மாநிலம் முழுவதிலும் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்ற கண் டனப்பேரணிகள் நடைபெற்றன.ஹரியானா, பஞ்சாப், இமாச்சலப்பிரதேசம் உள் ளிட்ட மாநிலங்களில் இடது சாரிக்கட்சிகள் சார்பில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
புதுதில்லி
தலைநகர் தில்லியில் தில்லி கேட் அருகே இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற் றது. பேரணியில் பிரகாஷ் காரத், சீத்தாராம் யெச்சூரி , பாசுதேவ் ஆச்சார்யா (மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), ஏ.பி. பரதன், து.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), புரட்சிகர சோச லிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் ஊழி யர்களும் அணிவகுத்தனர். ஆசப் அலி ரோடு வழியாக பேரணி சென்றது. பேரணியி னர் ஆசப்அலி ரோடு வருகை யில் பேரணியில் வந்தவர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்கள். அங்கு நடைபெற்ற கண்டனக் கூட் டத்தில் தலைவர்கள் உரை யாற்றினார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் பேசுகையில், பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெறும் வரை இந்தப் போராட்டம் ஓயாது என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் பேசுகையில், நாடு முழுவதும் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு நாள் மிகவும் வெற்றி கரமாக நடைபெற்றுக் கொண் டிருக்கிறது என்றும், அரசாங் கம் பெட்ரோல் விலையைத் திரும்பப் பெறும் வரை இப் போராட்டம் தொடரும் என்றார். சீத்தாராம் யெச்சூரி பேசுகையில், அரசாங்கம் பன் னாட்டு நிறுவனங்களுக்குச் சேவகம் செய்வதற்காகவும் தன் னுடைய நிதிப்பற்றாக்குறை யை சமாளிப்பதற்காகவும் மக் கள் மீது ஏவப்பட்டுள்ள இந்த விலை உயர்வை அனுமதி யோம் என்றும், இதற்கு எதி ராக நாடாளுமன்றத்திற்கு உள் ளேயும் வெளியேயும் போராட் டம் தொடரும் என்றும் கூறி னார். (ந.நி)

Leave a Reply

You must be logged in to post a comment.