பெட்ரோல் விலை கடந்த மாதம் லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தப்பட்டது. மத்திய அரசின் இந்த அநியாய நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம் பியது. ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் மே 31 அன்று கடையடைப்பு, மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற பல்வேறு போராட்டங் களுக்கு இடதுசாரி அமைப்புகள் அறகூவல் விடுத்தன.இதனடிப்படையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை, கடலூர், விழுப்புரம், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு, ஏஐடியுசி, இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு கள் சார்பில் மறியல், ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.வட – தென்சென்னை மாவட்டம் : வடசென்னை யில் சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தை, தமுமுக, பாமக ஆகிய கட்சிகள் சார்பிலும், பல்வேறு அமைப்புகள் சார் பிலும் மறியல், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. புரசை வாக்கத்தில் நடைபெற்ற மறியலில் மாவட்டச் செயலா ளர் எல்.சுந்தரராசன் தலைமை தாங்கினார். சரளா உட்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர்.திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்துநிலையம் முன்பு நடந்த மறியலுக்கு எஸ்.ராமசுப்பிரமணி தலைமை தாங் கினார். அயன்புரத்தில் டி.ஏழுமலை, திருவிக நகரில் ராம கிருஷ்ணன், தங்கசாலையில் எம்.வி.கிருஷ்ணன் ஆகி யோர் தலைமையில் நடந்த மறியலில் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.பெரம்பூர் எம்கேபி நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.கே.மகேந்திரன் மற்றும் பலர் பேசினர். ராயபுரம் கல்லறைச்சாலையில் சரோஜா தலைமையில் ஆர்ப்பாட் டம் நடந்தது. அம்பத்தூர் ஓ.டியில் லெனின் சுந்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. லெனின் சுந்தர் (சிபிஎம்), மாரியப்பன் (சிபிஐ), கே.என்.சேகர் (பாமக), சுந்தரமூர்த்தி (நாம்தமிழர் கட்சி) ஆகியோர் பங் கேற்றனர்.
ஆவடி பேருந்து நிலையம் முன்பு நடந்த ஆர்ப் பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஜி. காசிநாதன் தலைமை தாங்கினார். மணலியில் வீர அருண் தலைமையிலும், புதுவண்ணையில் கே.குண சுந்தரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.தென்சென்னை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 60 விழுக்காட்டிற் கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கவில்லை. இத னால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட வில்லை. மார்க்சிஸ்ட் கட்சியின் ஆலந்தூர் பகுதிக்குழு சார்பில் மடிப்பாக்கம் கூட்ரோட்டில் பகுதிச் செயலா ளர் எஸ்.அரிகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் கே.பாலச் சந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரத்தில் ஏ.வாசு தேவன், செங்கல்பட்டில் ஜி.மோகனன் (சிபிஎம்), கு.ராம தாஸ் (சிபிஐ), விடுதலை செழியன் (வி.சி), மதுராந்தகம் பி.கிருஷ்ணராஜ், சூணாம்பேடு பாரதி அண்ணா, பாண்டியன், திருப்போரூர் சங்கர், உத்திரமேரூர் சி.பாஸ் கரன், படப்பை எஸ்.திருஞானம், குன்றத்தூர் எம்.எஸ். ராஜா ஆகியோர் தலைமையில் 8 மையங்களில் நடை பெற்ற மறியல் போராட்டங்களில் 50 பெண்கள் உட்பட 450 பேர் கைது செய்யப்பட்டனர்.திருவள்ளூர் மாவட்டம் : திருத்தணியில் கே.எஸ்.சம் மந்தம், ஆர்.கே.பேட்டை சி.பெருமாள், தண்டளம் பே. ரவி, அருமந்தை கூட்டுச்சாலை பி.நடேசன், திருவள்ளூர் இ.மோகனா, தேவபாலு, கும்மிடிப்பூண்டி மாவட்டச் செயலாளர் கே.செல்வராஜ், கவரைப்பேட்டை யோக நாதன், திருநின்றவூர் பாலசுப்பிரமணி, பொன்னேரி எஸ். ஏகாம்பரம், ஆரணி இ.தவமணி, மீஞ்சூர் பி.கதிர்வேல் ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடை பெற்றது. இதில் 460 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் : கடலூர் உழவர் சந்தை அரு கில் ஊர்வலமாக புறப்பட்டு அண்ணாமேம்பாலத்தில் சிபிஎம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் பி.சுப்புராயன், ஒன்றியச் செயலாளர் ஜே.ராஜேஷ்கண்ணன், சிப்காட் செயலாளர் ஆழவந்தார், செயற்குழு உறுப்பினர் பி.கருப்பையன் ஆகியோர் தலைமை தாங்கினர்.இதே போல் சிதம்பரத்தில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்திற்கு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை ஏற்றார். மாநிலக்குழு உறுப்பினர்கள் மூசா, ஜான்சிராணி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். புவனகிரியில் மாதவன் தலைமையில் மறியல் நடைபெற்றது. மேலும் பல இடங்களிலும் மறியல் நடைபெற்றது.விழுப்புரம் மாவட்டம் : விழுப்புரத்தில் சிபிஎம் சார்பில் நடைபெற்ற ரயில் மறியலுக்கு சக்திவேல் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந் தன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். திண்டி வனத்தில் நடந்த மறியலுக்கு எம்.கலைச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர். அரசூரில் சலாவூ தின், உளுந்தூர் பேட்டையில் எம்.ஆறுமுகம், கள்ளக் குறிச்சியில் நடேசன், செஞ்சியில் செடுசேரலாரன், விக்கிரவாண்டியில் எ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றன.வேலூர் மாவட்டம் : வேலூரில் சிபிஎம் – சிபிஐ சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜி.நரசிம்மன், கு.மு. கோவிந்தராஜ், நசீர் அகமது ஆகியோர் தலைமை தாங்கி னர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எ.நாராயணன் துவக்கி வைத்தார். சிபிஐ மாவட்டச் செயலாளர் எ.சி.சாமிக்கண்ணு முடித்துவைத்தார்.ஆற்காட்டில் பி.கன்னியப்பன், காளிதாஸ், அரக் கோணத்தில் வெங்கடேசன், திருப்பத்தூரில் ஜாபர் சாதிக், வாலாஜாவில் தா.வெங்கடேசன், வாணியம்பாடி யில் அருள் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன.திருவண்ணாமலை மாவட்டம் : பெட்ரோல் – டீசல் விலை உயர்வை கண்டித்து திருவண்ணாமலையில் சிபிஐ, மற்றும் சிபிஎம் கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட் டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் எம்.வீரபத்திரன், சிபிஐ மாவட்ட செயலாளர் தங்கராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரகலநாதன், சிபிஐ நிர்வாகி முத்தையன், நகர செயலா ளர் எம்.சந்திரசேகரன், சிஐடியு தலைவர் பாரி, எஸ். ஆனந்தன், வாலிபர் சங்க நிர்வாகிகள் ராமதாஸ், கமலக் கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது பெண்கள் உட்பட ஏராளமானோர் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அறிவொளி பூங்கா அருகிலிருந்து கண்டன கோஷங்களுடன் ஊர் வலமாக வந்தனர். வந்தவாசியில் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் பெ.அரிதாசு தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஆவேசத்துடன் மக்கள் பங்கேற்றனர். இதேபோல் மாவட்டத்தின் அனைத்து தாலுக்காக்களி லும் நடைபெற்ற சாலை மறியல் போராட்டங்களில் பெண் கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் : கிருஷ்ணகிரியில் மாவட் டச் செயலாளர் ஜி.சேகர், ஓசூரில் எஸ்.வாசுதேவன், போச்சம்பள்ளியில் எஸ்.பி.சின்னசாமி, ஊத்தங்கரையில் மகாலிங்கம், சூளகிரியில் எஸ்.ஜி.முனியப்பா, சிங்காரப் பேட்டையில் சபாபதி, தேன்கனிக்கோட்டையில் ஆர். சேகர் ஆகியோர் தலைமையிலும் மறியல் நடைபெற்றது.தருமபுரி மாவட்டம் : தருமபுரியில் நடந்த ஆர்ப் பாட்டத்திற்கு கே.ஆர்.சக்கரவர்த்தி தலைமை தாங்கி னார். மாவட்டச் செயலாளர் எம்.மாரிமுத்து மற்றும் பலர் பேசினர். அரூரில் பி.டில்லிபாபு எம்எல்ஏ, பாலக்கோட்டில் கே.என்.மல்லையன் ஆகியோர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த மறியல், ஆர்ப்பாட்டங்களில் கட்சியின் மாவட் டச் செயலாளர்கள், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், வட்ட, ஒன்றிய, நகர செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.கடையடைப்பு போராட்டத்தால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட் டிருந்தன. ஆட்டோக்கள் இயக்கவில்லை. பொது மக்கள் திரளாக ஆதரவு அளித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.