கோவை, மே 31-பெட்ரோல் விலை உயர்வு முன்னெப்போதும் இல்லாத அளவில் ரூ.7.50 உயர்த்தப்பட்டதைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்கள் அழைப்பு விடுத்த குழு அடைப்பு போராட்டத்தை பொதுமக்கள் தன்னெழுச்சியாக முன்வந்து ஆதரித்தனர். கோவையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறுந் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. ஆட்டோக்கள் ஓடவில்லை. பல்வேறு கட்சியினர் ஆங்காங்கு ரயில், சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.கோவை நகரில் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி காந்திபுரம் நஞ்சப்பா சாலை, காட்டூர், அனுப்பர் பாளையம், நஞ்சப்பா சாலையோர வியாபாரக் கடைகள், ஜவுளி மார்க்கெட் பகுதிகளில் முற்றிலும் கடைகயடைப்பு நடைபெற்றது. திருச்சி சாலை, கிராஸ்கட், அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கோவை நகரில் செயல்படும் சிறு, குறு தொழில் முனைவோர் சங்கங்கள் விடுத்த அழைப்பை ஏற்று ஆவாரம்பாளையம், கணபதி, இடையர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் இன்ஜினியரிங் நிறுவனங்கள், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.
இவற்றில் பணியாற்றும் இரண்டரை லட்டசத்திற்கும் மேற்ட்டோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் இன்ஜினியரிங் உதிரியாக விற்பனைக்கடைகள், பல்பொருள் அங்காடிகள், ஸ்டீல் பர்னிச்சர் கடைகள், ஜவுளிக் கடைகள், நகைக்கடைகள், நகைப்பட்டறைகள் வியாழனன்று முற்றிலும் மூடப்பட்டன. மிக உயர்ந்த கட்டிடங்களில் கூட கட்டிட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன. கோவை மத்திய பேருந்து நிலைய கடைகள் மற்றும் அப்பகுதியிலும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.
வேலை நிறுத்தம்
பெட்ரோல் விலை உயர்வால் கடுமையாக தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதால் முற்றிலும் விலை உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி மே-27 அன்று கோவை நகரில் 10 ஆயிரம் ஆட்டோக்கள் வேலை நிறுத்தம் செய்திருந்தன. மேலும் கோவை மாவட்ட அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டுக்குழு அறைகூவலை ஏற்று மே-31 வியாழனன்று முழு அடைப்பு போராட்டத்திலும் பங்கேற்றனர். இதனால் நகர் முழுவதும் ஆட்டோக்கள் ஓடவில்லை. வியாழனன்று கூட்டுக்குழு சார்பில் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் எதிரில் அனைத்து ஆட்டோசங்க கூட்டுக்குழுத் தலைவர் பி.கே.சுகுமாறன் (சிஐடியு) தலைமையில் சாலை மறியலில் பேராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சுமார் 50 ஆட்டோ தொழிலாளிகள் கைது செய்யப்பட்டனர்.
அன்னூரில் முழு அடைப்பு
கோவை மாட்டம் அன்னூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு குழு ஆதரவு இருந்தது. கடைகள் இனைத்தும் முற்றிலும் அடைக்கப்பட்டிருந்தன. அன்னூரைச் சுற்றிலும் தொழிற்சாலைகள் எதுவும் இயங்கவில்லை. பயணிகள் இன்றி பெரும்பாலான பேருந்துகள் காலிகயாகவே இயங்கின. மேலும் பாரதிய ஜனதா கட்சியினர் கோவையில் ரயில் மறியலிலும், மேட்டுப்பாளையம் சாலை மற்றும் போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலை மறியலிலும் ஈடுபட்டு சுமார் 100 பேர் கைதாகினர். ஆங்காங்கே அரசுப் பேருந்துகள் சில இயங்கினாலும், பெரும்பாலான பொதுமக்கள் முழு அடைப்பிற்கு தங்கள் முழு ஆதரவை தெரிவித்தனர்.
சேலம் மாவட்டம்
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து சேலம் மாவட்டத்தில் வியாழக்கிழமை பல இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த மறியல் போராட்டதுக்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.தங்கவேல் தலைமை தாங்கினார். எம்.குணசேகரன்,பொன்.ரமணி வைரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இங்கு சிபிஐ சார்பில் நடந்த நடந்த மறியல் போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் ஆ.ஜீவானந்தம் தலைமை தாங்கினார். ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். எஸ்.கொல்லப்பட்டியில் சிபிஎம் சார்பில் நடந்த மறியல் போராட்டத்துக்கு சுந்தரம் தலைமை தாங்கினார்.அம்மணிகொண்டலாம்பட்டியில் சிபிஎம் சார்பில் நடந்த மறியலுக்கு பி.அன்பு தலைமை வகித்தார். பிராமமூர்த்தி முன்னிலை வகித்தார். சிபிஐ சார்பில் நடந்த மறியலுக்கு ஏ.மோகன் தலைமை தாங்கினார். கே.பி.கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார்.ஆத்தூரில் சிபிஎம் சார்பில் பரமேஸ்வரன் தலைமையில மறியல் போராட்டம் நடந்தது. வி.கே வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். இங்கு சடையன் தலைமையில் சிபிஐ கட்சியினர் மறியல் செய்தனர். எம்.முனுசாமி முன்னிலை வகித்தார். கருமந்துறையில் பொன்னுசாமி தலைமையில் சிபிஎம் கட்சியினர் மறியல் செய்தனர். ஆர் குழந்தைவேல் முன்னிலை வகித்தார்.அ.பட்டிணத்தில் சிபிஎம் கட்சியினர் பழனிமுத்து தலைமையில் மறியல் செய்தனர். சேதுமாதவன் முன்னிலை வகித்தார். இங்கு சிபிஐ சார்பில் நடந்த மறியலுக்கு டி கண்ணன் தலைமை தாங்கினார். எ.ரமணி முன்னிலை வகித்தார்.ஓமலூரில் சிபிஎம் சார்பில் நடந்த மறியலுக்கு பி.அரியாகவுண்டர் தலைமை தாங்கினார்.கே ஜோதிலட்சுமி முன்னிலை வகித்தார். இங்கு பரமேஸ்வரன் தலைமையில் சிபிஐ கட்சியினர் மறியல் செய்தனர்.மேச்சேரியில் சிபிஎம் கட்சியினர் ரத்தினவேல் தலைமையிலும், கே.ராஜாத்தி முன்னிலையிலும் மறியல் போராட்டம் செய்தனர். இங்கு சிபிஐ கட்சியினர் வைத்தியலிங்கம் தலைமையிலும், சிவராமன் முன்னிலையிலும் மறியல் செய்தனர்.மேட்டூரில் வெற்றிவேல் தலைமையிலும், இளங்கோ முன்னிலையிலும் சிபிஎம் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இங்கு சிபிஐ கட்சியினர் வரதராஜன் தலைமையிலும், வரதராஜன் முன்னிலையில் மறியல் செய்தனர்.
நங்கவள்ளில் சிபிஎம் கட்சியினர் தங்கவேல் தலைமையிலும், ஜீவானந்தம் முன்னிலையிலும் மறியல் செய்தனர். இங்கு சிபிஐ கட்சியினர் பிஆறுமுகம் தலைமையிலும், வேணுகோபால் முன்னிலையில் மறியலில் ஈடுபட்டனர்.பி.என்.பாளையத்தில் கே.பெருமாள் தலைமையிலும், கோபிக்குமார் முன்னிலையிலும் மறியல் செய்தனர். இங்கு சிபிஐ சார்பில் ஏ.ஆறுமுகம் தலைமையிலும், சாமிநாதன் முன்னிலையில் மறியல் போராட்டம் நடந்தது.சங்ககிரியில் ஏ.ராமமூர்த்தி தலைமையிலும, உதயகுமார் முன்னிலையிலும சிபிஎம் தொண்டர்கள் மறியல் செய்தனர். இங்கு ஆர்.ரத்தினம் தலைமையிலும், கருணைதாஸ் முன்னிலையிலும் சிபிஐ கட்சியினர் மறியல் செய்தனர்.எடப்பாடியில் லோகநாதன் தலைமையிலும், ஜி.கணபதி முன்னிலையிலும் சிபிஎம் கட்சினர் மறியல் செய்தனர். இங்கு சிபிஐ கட்சியினர் ஆர்.ஐய்யனார் தலைமையிலும், ஏ.மாதைய்யன் முன்னிலையில் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
குன்னூர்
குன்னூர் வி.பி.தெருவில் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அம்பேத்கார் நகர் கிளை செயலாளர் எம்.சண்முகம் தலைமை தாங்கினார். கண்டன ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் ஜேம்ஸ், ஆட்டோத் தொழிற்சங்க (சிஐடியு) தலைவர் ஆறுமுகம், கட்டுமான சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாயகிருஷ்ணன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க உதவி தலைவர் கே.ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் ஆர்.பத்ரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுப்ரமணி, சுரேந்திரன், பாய்ஸ் கம்பெனி கிளை செயலாளர் சாலமன் ராஜா, வாலிபர் சங்க வினோத், டேனியல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் குன்னூர் கிளை செயலாளர் பொ.இராமன் நன்றி கூறினார்.குன்னூர் மார்க்கெட், மவுண்ட் ரோடு, விபி தெரு, டிடிகே பிள்ளை ரோடு ஆகிய பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டன் தெரிவித்து குன்னூர் பகுதியில் ஆட்டோக்கள் மற்றும் வாடகை டாக்சிகள் இயங்கவில்லை.
கோத்தகிரி
இதேபோல், கோத்தகிரி மார்க்கெட் ஜீப்ஸ்டாண்ட் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோத்தகிரி சிபிஎம் ஏரியா கமிட்டி செயலாளர் ரஞ்சித் குமார் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.காந்தி, மகேஷ்குமார் ஆகியோர் விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தர்மராஜ், சச்சு, ராஜி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இடதுசாரிகள் அழைப்பு விடுத்திருந்த எதிர்ப்பு நாள் இயக்கத்திற்கு அனைத்து பகுதி மக்களும் முழு ஆதரவு தெரிவித்தனர். அதன்படி மளிகை கடைகள், பேக்கரிகள், தேனீர் கடைகள், எலக்ட்ரிக்கல்ஸ், உணவு விடுதிகள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டிருந்தது. அதே போல் ஆட்டோக்கள், டேம்போக்கள் ஓடவில்லை. ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பேருந்து நிலையம் முன்பு சிபிஎம், சிபிஐ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ரவி, சிபிஐ சென்னிமலை ஒன்றியச் செயலாளர் பொன்னுச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: