புதுச்சேரி, மே 31-பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இடது சாரிகட்சிகள் நடத்திய மறியல் போராட்டத்தில் புதுச்சேரியில் 450 பேர் கைது செய்யப்பட்டனர்.காங்கிரஸ் தலைமையி லான மத்திய ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தியதை கண் டித்தும். விலை உயர்வை உடனேதிரும்பப்பெறவேண் டும்எனவலியுறுத்தியும்மார்க் சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, பார்வர்டு பிளாக் உள்ளிட்ட இடது சாரிகட்சிகள் சார்பில் நாடு தழுவிய மறியல் போராட்டத் திற்கு வியாழனன்று (மே 31) அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக புதுச் சேரியில் இப்போராட்டம் நடைபெற்றது.புதுச்சேரி அண்ணா சாலை அருகில் நடந்த மறியல் போராட்டத்திற்கு, சிபிஐ மாநில செயலாளர் விசுவநாதன்,சிபிஎம் பிர தேச செயலாளர் பெருமாள், பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் முத்து ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கி னர்.
சிபிஎம் செற்குழு உறுப் பினர்கள் தா.முருகன், நில வழகன், ராஜாங்கம், ராம சாமி, கே.முருகன், ராமச் சந்திரன், இடைகமிட்டி செயலாளர்கள் முருகை யன், லெனின்துரை, பிரபு ராஜ், சிபிஐ மாநில நிர்வாகி கள் நாரா.கலைநாதன், சலீம், கீதநாதன் , அபிஷே கம், முருகன், சரளா உள் ளிட்ட இடதுசாரி கட்சிக ளின் ஊழியர்கள் இப்போராட் டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக அண்ணா சிலையிலிருந்து ஊர்வல மாக வந்து காமராஜர் சிலை எதிரே மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பெண்கள் உட்பட 320 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதே போல் பாகூர் தபால் நிலை யம் எதிரில் நடந்த மறிய லுக்கு சிபிஎம் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல் வன் தலைமை தாங்கினார். பிரதேச குழு உறுப்பினர் கள் பத்மநாபன்,சரவணன் உள்ளிட்ட 60 பேரை காவல் துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர். மத கடிப்பட்டில் நடந்த மறிய லுக்கு சிபிஎம் செயற்குழு உறுப்பினர் கலிவரதன் தலைமை தாங்கினார். கொம் யூன் செயலாளர் சரவணன், பிரதேசக்குழு உறுப்பினர் கள் உலகநாதன், அன்புமணி, ஆவணியப்பன், சங்கர் உள் ளிட்ட 70 பேரை காவல்துறை யினர் கைது செய்தனர்.

வணிக நிறுவனங்கள் அடைப்பு
மறியல் போராட்டத்தையொட்டி புதுச்சேரி நேருவீதி, காந்தி வீதி, அண்ணாசாலை, சின்னகடை, முத்தியால் பேட்டை, நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை உள் ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. புதுச்சேரியில் பெரும்பாலான இடங் களில் -சாலைகளில் மக்கள் கூட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது .

ஆட்டோ ஓட்டுநர்கள் மறியல்
சிஐடியு, ஏஐடியுசி, தொமுச, புதுச்சேரி மாநில ஆட்டோ சங்கம் உள்ளிட்ட ஆட்டோ சங்கங்கள் இப் போராட்டத்தில் பங்கேற்றதால் புதுச்சேரியில் 80 சதவீத ஆட்டோக்கள் இயங்கவில்லை. காமராஜர் சிலை எதிரே சிஐடியு ஆட்டோ ஒட்டுநர்கள் சங்கத்தின் பிரதேச பொதுச் செயலாளர் சீனுவாசன், ஏஐடியுசி ஆட்டோ சங்க மாநில பொதுச்செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் தலைமை யில் திரளான ஆட்டோ ஓட்டுநர்கள் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டு கைதாகினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.