புதுதில்லி, மே 31-நேபாளத்தில் ஜனநாயக செயல்பாடு மற்றும் மக்களின் அறிவார்ந்த திறன் இக் கட்டான சூழலில் இருந்து நாடு மீள உத வும் என நேபாள நாடாளுமன்ற அமைப்பு முடிவுக்கு வந்த நிலையில், சுமூகத்தீர்வு ஏற்பட இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிவிப்பில், நேபாள நாடாளுமன்றத்தில் நீட்டிக்கப்பட்ட ஆயுள் காலத்திற்குள் புதிய அரசியல மைப்பு அறிமுகம் ஆகவில்லை. நாங்கள் ஜனநாயக செயல்பாடு மற்றும் மக்களின் அறிவார்ந்த திறன் மீது நம்பிக்கை வைத் துள்ளோம். அரசியலமைப்பு உருவாக்கும் நடைமுறையில் இவை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அளித்துள்ளன. நேபா ளத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஒரு மித்த உணர்வு வழிகாட்டுதலுடன் தங்கள் தேசத்தின் ஸ்திரத்தன்மைக்கு அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர்வார்கள் என நம்பு கிறோம் எனத்தெரிவித்துள்ளது.
நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோ யிஸ்ட்), மாதேசி கட்சி, வம்சாவளி சமூகத் தினர் தனித்துவ அடிப்படையிலான கூட் டாட்சியை ஆதரிக்கின்றன. நேபாள காங் கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட்) மற்றும் சிறிய கட்சிகள் மேற்கண்ட கருத்துக்கு எதிர்ப் புத் தெரிவிக்கின்றன. இதனால் பிரதமர் பாபுராம் பட்டாராய் புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.நேபாள மக்களின் விருப்ப நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இந்தியா உதவத்தயாராக உள்ளது என்றும் வெளியுற வுத்துறை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேபாளத்தின் நிகழ்வுகளை இந்தியா கண்காணித்து வருகிறது.நேபாள நாடாளுமன்றம் அரசியல மைப்பை ஏற்படுத்த முடியாமல் மே 27ம் தேதி கெடு முடிவடைந்த நிலையில் தோல்வி அடைந்துள்ளது. அங்குள்ள அர சியல் கட்சிகள் இடையே கடுமையான கருத்துவேறுபாடு காணப்படுகிறது. இத னால் நேபாளத்தின் அரசியலில் குழப்ப நிலை நிலவுகிறது.இதனால் நவம்பர் மாதம் நாடாளுமன் றத்திற்கான புதியத் தேர்தலை பிரதமர் பாபு ராம் பட்டாராய் அறிவித்து உள்ளார். நேபாள ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த பட்டா ராய் புதியத் தேர்தல் நடைபெறும் வரை அரசின் தலைமைப் பொறுப்பில் இருப்பதாக ஜனாதிபதி ராம்பரண் யாதவ் கூறியுள்ளார்.நேபாளத்தின்-ஸ்திரமற்ற தன்மை அருகாமையில் உள்ள இந்தியாவுக்கு தீவிரமான நிகழ்வாக உள்ளது. நேபாளத் தில் ஏற்படும் பதற்றம் நீடித்து, இந்தியாவி லும் வரலாம் என்ற கவலை இந்தியா வுக்கு உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: