நெய்யாற்றின்கரை, மே 31-நம்பிக்கைத் துரோகியும், வஞ்சகனுமான செல்வரா ஜிற்கு சரியான பதிலடியை நெய்யாற்றின்கரை வாக் காளர்கள் கொடுக்க வேண்டு மென்று கேரள மாநில எதிர்க் கட்சித் தலைவரும் மார்க் சிஸ்ட் கட்சியின் மூத்த தலை வருமான வி.எஸ்.அச்சுதானந் தன் வேண்டுகோள் விடுத் துள்ளார். நெய்யாற்றின்கரை இடைத் தேர்தலில் இடதுசாரி ஜன நாயக முன்னணி வேட் பாளர் எஃப்.லாரன்சை ஆதரித்து பிரச்சாரம் செய்ய நெய்யாற்றின் கரைக்கு வந்திருந்த அச்சு தானந்தன் மேற்கண்டவாறு பேசினார்.அவர் மேலும் கூறிய தாவது: கட்சிக்கு நம்பிக்கை யாக இருப்பார் என்று தான் கடந்த தேர்தலில் செல்வ ராஜை வேட்பாளராக்கி வெற்றி பெறச் செய்தோம். ஆனால் அவர் கட்சி தாவிய தன் மூலம் கட்சியையும் வாக்காளர்க ளையும் வஞ்சித்து விட்டார். ஐக்கிய ஜனநாயக முன்னணி யில் சேர்வதைவிட தற் கொலை செய்துகொள்வதே மேல் என்று கூறிய செல்வராஜ், தற்போது அதே முன்னணியில் சேர்ந்து வாக்குக் கேட்டு வரு கிறார்.
அவருக்கு வாக்களிக்க நெய்யாற்றின்கரை வாக்காளர் கள் அவரது வேலையாட் களோ, அடிமைகளோ அல்ல. கட்சி தாவிகளையும், வஞ்ச கர்களையும் வரவேற்க காங் கிரஸ் கட்சி தயாராக நிற்கிறது.மத்திய-மாநில அரசுகள் மக்கள் விரோதப் போக்குகளை நடைமுறைப்படுத்தி வருகின் றன. மத்திய அரசு இதுவரை 15முறை பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது. உணவுப் பொருட்களின் விலை தாறுமா றாக எகிறிக் கொண்டிருக் கிறது. 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர் தலில் அனைத்துத் தொகுதி களிலும் காங்கிரஸ் தோல் வியைத் தழுவியது. அன்று கேரளத்தை விட்டுச் சென்ற ஏ.கே.அந்தோணி இடை யிடையே கேரளத்திற்கு வந்து போகிறார். மத்திய அரசின் சாதனைக் குறித்து கூறு வதற்கு அந்தோணியிடம் ஒன்றுமில்லை. செல்வராஜ் என்ற நம்பிக்கைத் துரோகியை யும் பிஜேபி-யையும் தோற் கடித்து இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர் வழக் கறிஞர் எஃப்.லாரன்ஸை வெற்றிபெறச் செய்ய வேண்டு மென்று நெய்யாற்றின்கரை வாக்காளர்களை வி.எஸ். அச்சு தானந்தன் கேட்டுக் கொண் டார்.இத்தொகுதியில் பிரச்சாரம் வியாழனன்று ஓய்ந்தது. ஜூன் 2ம் தேதி வாக்குப்பதிவு நடை பெறுகிறது.

Leave A Reply

%d bloggers like this: