திருவண்ணாமலை, மே 31-
திருவண்ணாமலை அருகே உள்ள சாத்தனூர் அணையை சுற்றிப் பார்ப்பதற் காக விழுப்புரத்திலுள்ள செல்லி யம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த புதுச்சேரி உருளையன் பேட்டை பகுதியில் வசித்து வரும் கணேஷ் (37) தன்னுடைய மாமா பாண்டியன் குடும்பத் தோடு 27ந் தேதி புதுவையிலி ருந்து புறப்பட்டு சாத்தனூர் அணைக்கு வந்திருந்தார்.சாத்தனூர் அணையில் சுற்றிப் பார்த்தபின்னர் அணையி லுள்ள நீச்சல் குளத்தில் இறங்கி அனைவரும் குளித்துள் ளார்கள். இதன்பின்னர் அனை வரும் நீச்சல் குளத்தைவிட்டு வெளியேவந்தார்கள். ஆனால் 9 வயது ரத்தினகிரீஸ்வரன் என்பவனை மட்டும் காண வில்லை. இதனால் பதற்ற மடைந்த குடும்பத்தினர் மீண் டும் நீச்சல் குளத்தில் இறங்கி தேடினார்கள்.அப்போது நீரில் மூழ்கிய ரத்தினகிரீஸ்வரன் கண்டு பிடிக்கப்பட்டான். உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச் சைக்காக புதுவை ஜிப்மரில் சேர்த்தனர். அங்கு சிறுவனை பரி சோதித்த டாக்டர்கள் சிறு வன் இறந்து விட்டதாக கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: