புதுதில்லி, மே 31-புதுதில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய பயன்பாட்டுக்காக அரசால் திரட்டப்பட்ட நில இடம் சதுர கஜம் ரூ.4க்கு 1955ம் ஆண்டுக்கு முன்னர் வாங்கப்பட்டது ஆகும். மிகக்குறைந்த விலைக்கு விற்று பரிதவிக் கும் விவசாயிகள் உரிய நஷ்ட ஈடு கோரி 57 ஆண் டுகளாக சட்ட ரீதியாக போராட்டம் நடத்தி வரு கின்றனர்.இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய நிறுவனம், தன் வசம் உள்ள நிலத்தை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டுள்ளது. குறைந்தமதிப்பு குத்தகை யால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தலைமை கணக்கு மற்றும் தணிக்கையாளர் (சிஏஜி) அலுவலகம் தனது அறிக் கையில் தெரிவித்துள்ளது.விமான நிலையத்திற்கு அருகே உள்ள மகிபால்பூர், நான்கல் தேவாத், ரங்புரி கிராம விவசாயிகள் சதுர கஜம் (ஒரு சதுர கஜம் அடி) இடத்தை ரூ.4க்கு விற்று பரிதாப நிலையில் இருப் பவர்கள் ஆவார்கள். விமான நிலைய விவ காரம் தொடர்பாக தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தில் மனுத்தாக்கல் செய்தவர் கர்னல் (ஓய்வு) தேவேந்தர் ஷெராவத்.
அவர் கூறுகையில், விவ சாயிகளுக்கு கூடுதல் நஷ்ட ஈடு பெற்றுத்தர நில கையக வழக்கு மற்றும் விமான நிலைய தனியார்மய விவ காரத்தை உச்சநீதிமன் றத்தில் தொடருகிறேன் என்றார்.சிஏஜி அறிக்கை வெளி யானதும், விமான போக்கு வரத்துத்துறை அமைச்ச கம் மற்றும் தில்லி அரசி டம் நான் பெற்றத்தகவல்களை பகிர்ந்து கொள்ள முடிவு செய்தேன் என்றும் அவர் கூறினார்.கர்னல் ஷெராவத், தில்லி கிராமின் சமாஜ் செயலாள ராகவும் விவசாயிகள் மகா சங்கத்தின் இணை அமைப் பாளராகவும் உள்ளார். இந்த மகா சங்கம், விவசாயி கள் சங்கங்களின் கூட்ட மைப்பு ஆகும். தனியாருக்கு விமான நிலைய நிலம் குத்தகைக்கு தாரை வார்த் ததில், ஒரு ஏக்கருக்கு ரூ.34 கோடி இழப்பு ஏற்பட்ட தாக சிஏஜி தெரிவித்துள் ளது. விமான நிலைய பயன் பாட்டுக்காக, 4799 ஏக்கர் நிலம் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டு மாற் றம் செய்யப்பட்டுள்ளது. சிஏஜியின்கணக்கு விவரப் படி ஒரு சதுர கஜம் ரூ.70 ஆயிரம் .விமான நிலைய நிலத் தில் 13 ஹோட்டல் திட்டங் கள் மேற்கொள்ளப்பட வுள்ளன. தனியாருக்கு தரப் பட்ட இந்த நில ஒப்பந் தத்தை தீவிரமாக கண் காணிக்கும் விவசாயிகள் மகா சங்கம், விமான நிலை யத்திற்கு இடம் தந்த விவ சாயிகளுக்கு போதிய நஷ்ட ஈடு தர வேண்டும் என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தை வலி யுறுத்தி உள்ளது. தனியார் நிறுவன பயன்பாட்டுக்கு அரசு இந்த நிலத்தை 60 ஆண்டு குத்தகைத் தொகை யாக வெறும் ரூ.100 மதிப் பில் சதுர அடியை தந்துள் ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.