புவனேஷ்வர், மே 31-ஒடிசா மாநிலத்தில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியை உடைக்க அக் கட்சியின் ஒரு சில எம்எல் ஏக்கள் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. முதல்வர் நவீன் பட்நாயக் கிற்கு 80 சட்டமன்ற உறுப் பினர்கள் ஆதரவுத் தெரி வித்து கையெழுத்திட்டு உள்ளனர்.ஒடிசா மாநிலத்தின் பிஜூ ஜனதா தளம் தலை வரும், முதல்வருமான நவீன் பட்நாயக் அரசுமுறைப் பய ணமாக பிரிட்டன் சென் றுள்ளார். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அவரது கட்சியின் 30 எம். எல்.ஏக்கள் மற்றும் 3 அமைச்சர்கள் கட்சியில் கோஷ்டி பூசல் ஏற்படுத்தும் மாநிலங்களவை உறுப் பினர் பியாரி மோகன் மோகபத்ரா வீட்டில் கூடி ரகசிய ஆலோசனை நடத் தினர். பட்நாயக் ஆட்சியை கவிழ்ப்பதற்கு இந்த ரகசிய ஆலோசனை நடந்தது. பட் நாயக் தலைமைக்கு எதிர்ப் புத் தெரிவிக்கும் மோக பத்ரா, கடந்த சில மாதங்க ளாக கட்சி நடவடிக்கைக ளில் இருந்து ஒதுங்கியுள் ளார்.
ஆட்சியைக் கவிழ்க்க நடந்த இந்தக் கூட்டத்திற்கு மறுநாள் புதனன்று பிஜூ ஜனதா தளம் எம்எல்ஏக்கள் நவீன் பட்நாயக்கின் இல்லத் தில் குவிந்து கோஷ்டி அணிக்கு பதிலடி தரும் வகையில் முடிவு எடுத்தனர்.கட்சியின் மூத்தத்தலை வரும் நிதித்துறை அமைச் சருமான பிரபுல்லா சந்திரா கட்டாய் கூறுகையில், கட் சிக்கு எந்தவித அச்சுறுத்த லும் இல்லை. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்க ளும் பட்நாயக்கிற்கு ஆதர வாக உள்ளனர் என்றார். இதற்கிடையே கட்சியின் மூத்தத் தலைவர் பிரவாத திரி பாதி செய்தியாளர்களிடம் கூறுகையில், எம்எல்ஏக்க ளில் ஒரு பிரிவினர் கட்சி யை உடைக்க முயன்று தோல்வி அடைந்துள்ளனர் என்றார். போராட்டக்காரர் களுக்கு எதிராக நடவடிக் கை எடுக்க வேண்டும் என இதர எம்எல்ஏக்கள் கூறி யுள்ளனர்.பட்நாயக்கின் ஆட்சி யை கலைப்பதற்காக போராட்டம் எதுவும் மேற் கொள்ளப்படவில்லை. ஆனால் சில எம்எல்ஏக்கள் தனது இல்லத்தில் கூடி பேசி னர் என்று கோஷ்டி பூச லுக்கு தலைமை வசிக்கும் மோகபத்ரா விளக்கம் அளித் தார். கட்சி உரிய முறையில் செயல்படவில்லை. கட்டுப் பாடு இல்லாதவர்கள் மீது நடவடிக்கையும் இல்லை என அவர் தெரிவித்தார்.மோகபத்ரா வீட்டிற்கு வந்த 30 எம்எல்ஏக்களில் பலர் தங்கள் சொந்த விருப் பத்தின் பேரிலேயே வந்ததா கவும், 13 எம்எல்ஏக்கள் அவ ரது வீட்டிற்கு வரவிரும்பிய போது பத்திரிகையாளர்கள் வீட்டுக்கு வெளியே இருந் ததால் வரவில்லை என்றும் மோகபத்ரா தெரிவித்தார்.

Leave A Reply