திருவாரூர், மே 31-பெட்ரோலியப்பொருட் களின் விலை உயர்வை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் திரு வாரூர் மாவட்டத்தில் 10 மையங்களில் ஆவேச மறி யல் போராட்டம் நடை பெற்றது.
ரயில் மறியல்
மாவட்டத் தலைநக ரான திருவாரூரில் ரயில் மறியல் போராட்டம் நடை பெற்றது. பெட்ரோல் விலை உயர்வை கண்டித்ததோடு, திருவாரூரில் இருந்து மயி லாடுதுறை வழியாக சென் னைக்கு பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் இணைத்து இந்த மறியல் நடைபெற் றது. எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் வரை செல்லும் விரைவு ரயிலை கட்சியின் மாவட்டச் செய லாளர் ஐ.வி.நாகராஜன் தலைமையில் 25 பெண்கள் உட்பட 150க்கும் மேற்பட் டோர் மறித்து முழக்கங் களை எழுப்பினர். இப் போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ரங்கசாமி, நா.பாலசுப் ரமணியன், ஜி.பழனிவேல், மாவட்டக்குழு உறுப்பினர் கள் எம்.பி.கே.பாண்டியன், எம்.கலைமணி, என்.இடும் பையன், மாதர் சங்க மாவட் டத் தலைவர் பா.கோமதி, உழைக்கும் பெண்கள் ஒருங் கிணைப்பாளர் இரா. மாலதி, சிபிஎம் நகரக்குழு உறுப்பினர்கள் எஸ்.கிருஷ் ணன், குரு.சந்திரசேகரன், ஒன்றியக்குழு உறுப்பினர் கள் கே.வடுகநாதன், ஜெய பால், ஜெயச்சந்திரன், கொர டாச்சேரி ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.மருதை யன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் க. தமிழ்ச்செல்வன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற சாலை மறி யலுக்கு மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.தங்க ராசு தலைமையேற்றார். ஒன்றியச் செயலாளர் சி. ஜோதிபாசு, நகரச் செயலா ளர் எஸ்.சாமிநாதன் மற்றும் 50 பெண்கள் உட்பட 150 பேர் மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.மன்னார்குடி பெரியார் சிலை அருகில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் ஏ.தங்க வேல், நகரச்செயலாளர் கே. நீலமேகம், கூத்தாநல்லூர் நகரச் செயலாளர் ஏ.கே. கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முத்துப்பேட்டை ஒன் றியம் பாண்டி ரயிலடி அரு கில் நடைபெற்ற சாலைமறி யலுக்கு மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி.என்.தங்க ராசு தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் கே.வி. ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜி.சீனிவா சன், ஆர்.வீரமணி மற்றும் 65 பெண்கள் உட்பட 150க் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கோட்டூர் பேருந்து நிலையம் அருகில் எஸ்.அப்பாத்துரை தலை மையில் மறியல் போராட் டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். குமாரராஜா மற்றும் ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் திர ளானோர் கலந்து கொண் டனர்.வலங்கைமான் ஒன்றி யம் ஆலங்குடி கடைவீதி யில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமையில் சாலைமறி யல் நடைபெற்றது. ஒன்றி யச் செயலாளர் என்.ராதா உட்பட நூற்றுக்கணக்கா னோர் பங்கேற்றனர்.நீடாமங்கலம் பெரியார் சிலை அருகில் நடைபெற்ற மறியலுக்கு மாவட்ட செயற் குழு உறுப்பினர் வி.எஸ். கலியபெருமாள் தலைமை யேற்றார். ஒன்றிய செயலா ளர் பி.கந்தசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் கே.கைலா சம், நகரச் செயலாளர் சி.டி. ஜோசப் உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர்.
கொரடாச்சேரி வெட் டாற்றுப்பாலம் அருகில் நடைபெற்ற மறியலுக்கு ஒன்றிய செயலாளர் எம். சேகர் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் கே.சீனிவாசன் மற்றும் 25 பெண்கள் உட்பட 150 பேர் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர்.நன்னிலம் ஒன்றியம் பேரளம் கடைவீதியில் நடைபெற்ற மறியலுக்கு ஒன்றியச் செயலாளர் டி. வீரபாண்டியன் தலைமை யேற்றார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.நட ராஜன், எஸ்.காளிமுத்து, கே.தமிழ்ச்செல்வி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்துநிலையம் அருகில் மாவட்ட செயற்குழு உறுப் பினர் பி.ஆர்.சாமியப்பன் தலைமையில் சாலைமறி யல் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். லட்சுமி, ஒன்றியச் செயலா ளர் எப்.கெரக்கோரியா உட்பட 75 பேர் மறியலில் பங்கேற்றனர்.மார்க்சிஸ்ட் கட்சி வேண் டுகோளை முன்னிட்டு கடை களும் சில இடங்களில் அடைக் கப்பட்டிருந்தன. ஆட் டோக்கள் இயங்கவில்லை.

Leave a Reply

You must be logged in to post a comment.