பெட்ரோல் விலையை குறைக்காவிட் டாலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் கசப் புடன் நீடிப்போம் என்று திமுக தலைவர் கரு ணாநிதி கூறியுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு, ஒரே நாளில் பெட் ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 அள வுக்கு உயர்த்தி அறிவித்தது. சுதந்திர இந்தியா வில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்றப் பட்ட இந்த விலை உயர்வு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டது. விலை உயர்வு அறிவிப்பு வந்தவுடன் விலையைக் குறைக்குமாறு மத்திய அரசிடம் கேட்போம் என்றுதான் திமுக தலைமை கூறியது. இடது சாரிக் கட்சிகள் நாடு தழுவிய போராட்டத் திற்கு அழைப்பு விடுத்தன. பல்வேறு கட்சி களும் போராட்டத்தில் குதித்தன. இந் நிலை யில் வேறு வழியில்லாமல் மே 30ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்தது. சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, பெட்ரோல் விலையை ரூ.7.50 வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது “கொடுமையானது” என்று வர்ணித்தார். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக உள்ள அந்தோணியே பெட் ரோல் விலை உயர்வை கண்டித்துள்ள சூழ் நிலையில், நான் சொல்வதை பிரதமர் கேட்கா விட்டாலும் பாதுகாப்புத்துறை அமைச்சரின் கோரிக்கையையாவது ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
‘திமுகவைப் பொறுத்தவரையில் மத்திய அரசோடு கூட்டணியிலே இருந்தாலும்கூட கூட்டணி வேறு, அதே நேரத்தில் மக்கள் விரோதமான காரியங்கள் நடைபெறும் போது அதைத் தடுக்கின்ற நிலையில் செயல்படுவது என்பது வேறு. நாங்கள், திராவிட முன்னேற்றக் கழகம். பாஜகவோடு கூட்டணியிலே இருந்து கொண்டு – வி.பி.சிங் பிரதமராக இருந்த போதும், அந்தக் கூட்டணியிலே இருந்து கொண்டு – எந்த இடத்தில் இருந்தாலும் நம் முடைய பிரதான அடிப்படைக் கொள்கை களுக்கு மாசு வருமேயானால், அதைச் சுட்டிக் காட்டி, அதைத் தீர்த்துவைக்கக்கூடிய பெரும் பொறுப்பை மத்தியிலே உள்ளவர்களுக்கு அளித்து, அந்தப் பொறுப்பை அவர்கள் நிறை வேற்றாவிட்டால், எதிர்ப்புக்குரலை உயர்த்தி அவர்களோடு இருக்கிற வரையிலே இருந்து, முடியாவிட்டால், நாம் தனியாக பிரிந்து நம் முடைய கொள்கைகளைத்தான் நாம் வலி யுறுத்தி வந்திருக்கிறோம்’ என்று திமுக தலை வர் குறிப்பிட்டுள்ளார். கருணாநிதியின் இந்த பேச்சைத் தொடர்ந்து சில தொலைக்காட்சிகள் மத்திய அரசிலி ருந்து திமுக விலகுவதாக செய்திகள் வெளி யிட்டன. இதற்கு காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளரும் விளக்கம் அளித்தார். ஆனால், ஆர்ப்பாட்டம் முடிந்தவுடனேயே செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதி, பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டாலும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் கசப்புடன் நீடிப்போம் என்றார். பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டால் கூட்டணியி லிருந்து வெளியேறுவோம் என்று நிபந்தனை விதிக்க முடியாது. குறைக்காவிட்டால் கூட்ட ணியை விட்டு வெளியேறிவிடுவோம் என்றும் கூறமுடியாது. ஏனென்றால், திடீரென்று கூட் டணியை விட்டு வெளியே வந்தால் மத்தியில் வரவிருக்கும் ஆட்சி பிற்போக்கான மதவாத சார்புடைய ஆட்சியாக வரலாம் என்று பின் வாங்கினார். பெட்ரோல் விலையைக் குறைப் பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் ஆலோ சித்து வருவதாகவும் நல்ல தகவல் வரலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதியின் இத்த கைய முரண்பட்ட பேச்சு, அந்தக் கட்சியின் தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்திய தாக செய்திகள் கூறுகின்றன. மத்திய அரசை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற வில்லை. பெட்ரோல் விலை உயர்வை எதிர்த் துத்தான் நடைபெறுகிறது என்று அவர் அளித் துள்ள விளக்கம், திமுக தொண்டர்களை மட்டு மல்ல, தமிழக மக்களையே குழப்பத்தில் ஆழ்த் தியுள்ளது. குடியரசுத்தலைவர் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால் அரசுக்கு நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை என்றும் கருணா நிதி கூறியுள்ளார். அவரே கூறியுள்ளதுபோல, கொடுமையாக விலையை உயர்த்தி மக்கள் வாழ்வை கடுமையான நெருக்கடிக்கு உள் ளாக்கினாலும்கூட அதை திமுக கண்டு கொள்ளாது. மக்களுக்கு எந்த அளவுக்கு கசப்பை ஊட்டினாலும் அதுகுறித்து திமுக வுக்கு கவலையில்லை.ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது, மதவாத பாஜகவுடன் திமுக ஏற்கெனவே கூட்டணி வைத்திருந்ததை குறிப்பிட்டார். ஆனால் இப் போது நாங்கள் கூட்டணியிலிருந்து விலகி னால் மதவாத ஆட்சி வந்துவிடும் என்று கூறு கிறார். பாஜகவுடன் கூட்டணி அமைத்து மத்திய அமைச்சர் பதவிகளை திமுக பெற்றி ருந்தபோது, திமுக இருக்கும் இடத்தில் மத வாதம் வராது என்று மறைந்த மூத்த தலைவர் சி.சுப்ரமணியம் கூறியுள்ளதாக அடிக்கடி குறிப்பிடுவார். ஆனால் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்த காலத்தில் பாஜக தன்னுடைய மதவெறி நிகழ்ச்சிநிரலை நிறைவேற்றிக் கொண்டுதான் இருந்தது. உச்சகட்டமாக குஜராத்தில் சிறுபான்மை முஸ்லிம் மக்கள் நரவேட்டையாடப்பட்ட போதுகூட, இது வேறு மாநில விவகாரம் என்று ஒதுங்கிக்கொள்ள திமுகவினால் முடிந்தது. பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த போது திமுகவின் அடிப்படை கொள்கைக்கு விரோதமான காரியங்கள் நடைபெற்றபோது கூட, ஆட்சியிலிருந்து விலக திமுக முன் வரவில்லை. மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பின்பற்றும் நவீன, தாராளமயமாக்கல் கொள்கையுடன் திமுகவுக்கு எந்தக் கசப்பும் இல்லை. பெட்ரோலுக்கு அரசு விலை நிர்ண யிக்கும் முறையை கைவிட்டு எண்ணெய் நிறு வனங்களே விலையை தீர்மானித்துக்கொள்ள லாம் என்ற மத்திய அமைச்சரவையின் கொள்கை முடிவுக்கு திமுக கைதூக்கி ஆத ரவு தெரிவித்தது. அந்த முடிவின் காரண மாகவே பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்த் தப்பட்டு, தற்போது ஒரே நாளில் லிட்டருக்கு ரூ.7.50 அளவுக்கு உயர்த்தும் நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது. டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகிய பெட்ரோலியப் பொருட்களுக் கும் அரசு விலை நிர்ணயிக்கும் முறையை விலக்கிக்கொண்டு, சந்தை விலைக்கே விட்டுவிடப்போவதாக மன்மோகன் சிங் அரசு பயமுறுத்தி வருகிறது. அப்படி ஒரு கொள்கை முடி வெடுத்தாலும்கூட திமுக அதை எதிர்க் கப்போவதில்லை. ஆனால், அவற்றின் விளை வாக அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறும்போது மட்டும் சற்று விலையைக் குறைக்குமாறு வேண்டுகோள் விடுப்பது மட் டுமே தன்னுடைய கொள்கைபூர்வ கடமை என்று திமுக கருதுகிறது.
அதுகூட மக்களின் அதிருப்தியிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளத்தான். அமெரிக்காவின் பொருளாதாரம் ஆட்டம் காண்பதால் எண்ணெய் வளத்தை தன்னு டைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க அமெ ரிக்கா முயல்கிறது. இதனாலேயே இராக்கை ஆக்கிரமித்தது. ஈரானையும் ஆக்கிரமிக்க முயல்கிறது. டாலர் மதிப்பில் பெட்ரோலியப் பொருட்களை கொள்முதல் செய்வதும் தற் போதைய விலை உயர்வுக்கு ஒரு காரணமாக உள்ளது. ஆனால் மன்மோகன் சிங் அரசின் அமெரிக்க சார்பு அயல்துறை கொள்கையோ டும் திமுகவுக்கு எந்தக் கசப்பும் இல்லை. மத்திய அமைச்சர் பொறுப்பை உவப்போடு தான் திமுக வகித்து வருகிறது. சில்லரை வர்த் தகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை நுழைய அனுமதித்தாலும் அந்த முடிவில் திமுகவுக்கு கசப்பு இருக்கப்போவதில்லை. மக்கள் நலனைப் பற்றி திமுகவுக்கு கவலையில்லை. எத்தகைய மக்கள் விரோதக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் “கசப்போடு” அதை ஏற்றுக்கொண்டு எப்படியேனும் பதவி யில் தொடரவே திமுக விரும்புகிறது. பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து அதி முகவும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. ஆனால் மத்திய அரசு பின்பற்றும் நவீன, தாராளமயமாக் கல் கொள்கையோடு அந்தக் கட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை. பாஜக விலை உயர்வை எதிர்த்துப் போராடி னாலும் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட் டாலும் தாராளமயமாக்கல் கொள்கைகளையே அந்தக் கட்சி தாராளமாக பின்பற்றி வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வுக் குக் காரணமான கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதோடு மட்டுமின்றி, மாற்றுக் கொள் கைகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே முன்வைக் கின்றன. பெட்ரோல் விலை உயர்வு என்பது நவீன, தாராளமயமாக்கல் கொள்கையின் விளைவேயாகும். இடதுசாரிக் கட்சிகள் விளைவை மட்டுமின்றி, இத்தகைய மோச மான விளைவுகளுக்குக் காரணமான நாசகர கொள்கைகளையும் எதிர்த்துப் போராடு கின்றன என்பதே உண்மை.

Leave a Reply

You must be logged in to post a comment.