வேலூர், மே 31-செல்போன்கள் மற்றும் சாட்டிலைட் போன்களில் பயன்படுத்த தக்க வகையில் புதிய மென்பொருள்களை (சாப்ட்வேர்ஸ்) கண்டு பிடிக்க பொறியியல், அறிவி யல் மற்றும் கணினி அறி வியல் பட்டதாரிகளுக்கு விஐடி பல்கலைக்கழகத்தில் உள்ள தொழில் நுட்ப வணிக பெட்டகத்தில் 6 வார காலம் பயிற்சி அளிக்கப்பட உள் ளது. இப்பயிற்சி வகுப்புகள் ஜூன் மாதம் 14ம் தேதி தொடங்கவுள்ளது. என்று விஐடி வேந்தா ஜி. விசுவ நாதன் தெரிவித்தார்.இது குறித்து செய்தியா ளர்களிடம் கூறியதாவது;மத்திய அரசின் அறியில் மற்றும் தொழில் நுட்ப துறையும் விஐடி பல்கலைக் கழகமும் இணைந்து விஐடி பல்கலைக்கழகத்தில் உள்ள தொழில் நுட்ப வளாகத்தில் டிபிஐ எனப்படும் தொழில் நுட்ப வணிக பெட்ட கத்தை அமைத்துள்ளன. இந்த டிபிஐ மையத்தின் மூலமாக புதிய தொழில் முனைவோரை உருவாக் கவும், ஆராய்ச்சிகளில் ஈடு படுவதற்கு வசதியாக ஆரா ய்ச்சி மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
இதில் நவீன தொழில் நுட்ப கருவிகளு டன் கூடிய ஆய்வகங்கள் பல கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளன.தற்போது செல்போன் பயன்படுத்துவோரின் எண் ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவர்களுக்கு தேவையான நவீன வசதி களை அளிக்கும் பொருட்டு செல்போன்கள் மற்றும் சாட்டிலைட் போன்க ளுக்கு தேவையான புதிய பொருட்களை கண்டு பிடிக்க வேண்டிய தேவை அதிரித்துள்ளது. குறிப்பாக செல்போன்களில் விளை யாட்டு அனிமேஷன், ஆண்ட் ராய்டு போன்றவற் றில் புதிய வசதிகள் செல் போன் பயன் படுத்துவோர் விரும்பும் நிலை உள்ளது. இப் படிப்பட்ட வசதிகள் கூடிய மென்பொருட்களை உருவாக்கப்பட வேண்டும். இதற்கான பயிற்சி ஜூன் 14ம் தேதி தொடங்கி ஜூலை 18ம் தேதி முடிய 6 வார காலத்திற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி கட்டணமாக ரூ. 10 ஆயிரம் செலுத்த வேண்டும். இப் பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் ஜூன் மாதம் 7 ம் தேதிக்குள் விஐடி பல்கலைக்கழகத்தின் டிபிஐ மையத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.இது சம்மந்த மான மேலும் தகவல்கள் பெற றறற.எவை.வbi.உடிஅ என்ற இணைய தளத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: