ஜெனரல் வி.கே.சிங் ஓய்வுபெற்றார்
புதுதில்லி, மே 31-தன்னுடைய 26 மாத கால தலைமைத் தளபதி பணியின்போது ராணுவத் தின் உள்கட்டமைப்பும், வசதிகளும், திறனும் அதி கரித்துள்ளது என்று ஓய்வு பெறும் இந்திய தரைப் படையின் தலைமை தள பதி ஜெனரல் வி.கே.சிங் கூறினார்.11 லட்சத்து 30 ஆயிரம் வீரர்களைக் கொண்ட இந் திய ராணுவத்தின் தலை மைத் தளபதியாகப் பணி யாற்றிய ஜெனரல் வி.கே. சிங் தனது 62ம் வயதில் பணிநிறைவு செய்கிறார். அவருடைய பணிக்காலம் சர்ச்சைக்குள்ளதாக இருந் தது. அவருடைய வயது குறித்த பிரச்சனை உச்சநீதி மன்றம் வரை சென்றது. உச்சநீதிமன்றம் குட்டிய பின் அப்பிரச்சனை முடி வுக்கு வந்தது.ராணுவத்தின் ஆயுத வாகனங்கள் (தாத்ரா) வாங் குவதில் ஊழல் நடந்துள் ளது என்றும் தன்னிடம் லஞ்சம் அளிப்பதற்கான தூண்டுதல்கள் செய்யப் பட்டன என்றும் அவர் குற்றம் சாட்டினார். லெப். ஜெனரல் தேஜிந்தர் சிங் கின் பெயரை அவர் குறிப் பிட்டுக்கூறினார். இப்பிரச் சனை தற்போது நீதிமன்றத் தின் முன்பும், துறை ரீதி யான விசாரணையிலும் உள்ளது. வியாழனன்று மரபு ரீதியான அணிவகுப்பு மரியாதையைப் பெற்றுக் கொண்டு அவர் பணி ஓய்வு பெற்றார்.

நாதியற்றுக்கிடந்தபையால் பீதி
பெங்களூர், மே 31-பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் கேட் பாரற்றுக்கிடந்த பை பீதி யைக் கிளப்பிவிட்டது. அதில் லேப் டாப்தான் இருந்தது என்று காவல் துறை கூறிய பின்னரே அங்கு அமைதி நிலவியது.பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் அநா தையாகக் கிடந்த பை யொன்று பாதுகாவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற் படுத்தியது. அவர்கள் உட னே விமான நிலைய காவல் துறையிடம் கூறினர். காவல்துறை வெடிகுண்டு குழு மற்றும் மோப்ப நாய் களுடன் அங்கு வந்தனர். முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளுக்குப்பின் பை திறக்கப்பட்டவுடன் கூடி யிருந்தோர் மத்தியில் நிம்ம திப்பெருமூச்சு ஏற்பட் டது. அந்தப்பையில் ஒரு லேப் டாப் இருந்தது.பயணிகள் சாமான் கொண்டு செல்லும் தள்ளு வண்டியிலிருந்து அது விழுந்து விட்டது என தெரியவந் தது. பின்னர் அவர் விமான நிலையம் வந்து பையைப் பெற்றுச் சென்றார்.

கடைசி காலாண்டில் கிங் பிஷரின்இழப்பு அதிகரிப்பு
மும்பை, மே 31-2011-12ம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் கிங் பிஷர் விமான நிறுவனத் தின் இழப்பு ரூ.1153.53 கோடியாக அதிகரித்துள் ளது. இதற்கு எரிபொரு ளின் செங்குத்தான விலை உயர்வும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியும் கார ணங்களாகக் கூறப்படுகின்றன.2010-11ம் நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண் டில் அதன் இழப்பு ரூ.355.55 கோடியாக இருந்தது என்று கிங்பிஷர் நிறுவ னம் மும்பை பங்குச் சந் தைக்கு அளித்த பதிவுக் குறிப்பில் கூறியுள்ளது. கடந்த ஓராண்டாகவே அது நிதி நெருக்கடியில் சிக்கி நிற்கிறது. மே 2005ல் தொடங்கப்பட்ட கிங்பி ஷர் இதுவரை லாபக் கணக்கு காட்டியதில்லை. 2010-11ல் ரூ.1027.39 கோடி யும் 2011-12ல் ரூ.2328 கோடி யும் இழப்பு ஏற்பட்டுள்ள தாக அது கூறியுள்ளது.செயல்பாட்டு செல வின சிக்கனத்தை எரிபொ ருள் விலை உயர்வும், ரூபா யின் மதிப்பு வீழ்ச்சியும் மிஞ்சிவிட்டன என்று அதன் அறிக்கை கூறுகி றது. நிதி நெருக்கடி காரண மாக அது 20 விமானங்களு டன் 110 பயணங்களை நாளொன்றுக்கு மேற் கொள்கிறது. சென்ற ஆண் டில் அது 66 விமானங்களு டன் நாளொன்றுக்கு 400 பயணங்களை நடத்தியது.

Leave A Reply

%d bloggers like this: