புதிய ராணுவத் தளபதியாகவிக்ரம் சிங் பதவியேற்றார்
புதுதில்லி, மே 31-இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக ஜெனரல் விக்ரம் சிங் வியாழனன்று பதவியேற்றார். 26 மாதம் ராணு வத் தளபதியாக இருந்து பல்வேறு சர்ச்சைகளுடன் பேசப் பட்ட வி.கே.சிங் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, புதிய தள பதி நியமனம் நடந்துள்ளது. நாட்டின் 25வது ராணுவத் தளபதி விக்ரம் சிங். 59 வயது ராணுவத் தலைவரான அவர் 2 ஆண்டுகள் 3 மாதம் தலைமைப் பதவியில் இருப்பார்.இந்த பதவிக்கு முன்னர் அவர் கொல்கத்தாவை மைய மாகக் கொண்ட கிழக்கு ராணுவப் படைப்பிரிவின் தளபதி யாக இருந்தார். கலவரப்பகுதிகளில் அவர் தலைமையில் படைப்பிரிவு திறம்பட செயல்பட்டுள்ளது. அவர் ஸ்ரீநகரை மையமாகக் கொண்ட படைப்பிரிவின் தளபதி யாகவும் அக்னூரை மையமாகக் கொண்ட 10வது டிவிஷ னில் மேஜர் ஜெனரலாகவும் பதவி வகித்துள்ளார்.‘பிக்கி’ என நண்பர்களால் பெரிதும் அறியப்படுபவர். மார்ச் 31, 1972ம் ஆண்டு சீக்கிய இலகுரக தரைப்படைப் பிரிவில் சேர்ந்து தனது ராணுவ சேவையைத் துவக்கினார். தலைசிறந்த இந்திய ராணுவக் கழகத்தில் (ஐஎம்ஏ) பயிற்சி பெற்ற பின்னர் விக்ரம் சிங் ராணுவத்தில் இடம் பிடித்தார்.
அவர் ஐஎம்ஏவில் இருந்தபோது, படைப்பிரிவு நபர் களின் உதவியாளராகவும் சிறந்த யுக்தி மற்றும் தலைமைத் துவத்திற்காக ஜம்மு-காஷ்மீர் ரைபிள் தங்கப் பதக்கத்தை யும் பெற்றார். ஸ்ரீ நாகேஷ் டிராபியும் அவருக்கு கிடைத்தது. படைப்பிரிவு பள்ளியில் இளம் அதிகாரிகளுக்கான பயிற்சியில் கமாண்டோ கத்தி, சிறந்த நுணுக்கம் திறனுக் காக விருது பெற்றார். பெல்காம் தரைப்படை பயிற்சிப் பள்ளியில் பயிற்சி ஆசிரியராகவும் இருந்துள்ளார்.கார்கில் போர் நடைபெற்றபோது தில்லி ராணுவ செயல் இயக்குநரகத்தில் பணியாற்றி, ஊடகங்களுக்கு போர் நிலவர முன்னேற்றம் குறித்து கூறி வந்தார். பிரி கேடியராக ஜெனரல் சிங், யு.எஸ். ராணுவ போர் கல் லூரியில் (பென்சில்வேனியா) பங்கேற்றுள்ளார். மத்திய அமெரிக்காவில் ஐக்கிய நாடுகளின் சார்பில் நடந்த, இரண்டு கலை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுள்ளார். காங்கோ ஜனநாயக குடியரசில் அவர் படைப்பிரிவு துணைத் தளபதியாகவும் கிழக்கு படைப்பிரிவின் ஜிஓசியாகவும் இருந்துள்ளார்.விக்ரம் சிங் மனைவி சுஜித் கௌர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

புதிய தொலைத்தொடர்பு கொள்கைக்கு ஒப்புதல்:ரோமிங் கட்டணம் ரத்தாகிறது
புதுதில்லி, மே 31-புதிய தொலைத்தொடர்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து நாடுமுழுவதும் மொபைல்போன் சேவைக்கான ரோமிங் கட்டணம் ரத்தாகிறது.கடந்த ஆண்டுகளில் மொபைல்களில் ரோமிங் கட் டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்தன. ஆனால் இந்த ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபில் தெரிவித்து இருக்கிறார்.ஒரு மாநிலத்தில் பயன்படுத்த வேண்டிய சிம் கார்டை வேறொரு மாநிலத்தில் பயன்படுத்தினால் இதற்கு தனியாக ரோமிங் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்படும் என்று மத் திய அமைச்சகம் வியாழனன்று கூறியிருக்கிறது.தொலைத்தொடர்பு சம்பந்தமாக சில முக்கிய மாற்றங் களை இந்திய அரசு கொண்டு வரும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.இது மட்டுமல்லாமல் 2020-ஆம் ஆண்டுக்குள் 100 சதவிகிதம் அகன்ற அலைவரிசை வசதி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இந்த புதிய தொலைத் தொடர்பு கொள்கையின் முக்கியத்துவம் என்று கூறப் பட்டுள்ளது.

நிதின் கத்காரி மீது அத்வானி மறைமுகத் தாக்கு
புதுதில்லி, மே 31-கர்நாடகம் மற்றும் ஜார்க்கண்டில் கட்சி விவகாரங் களைக் கையாண்ட விதத்தால் மக்கள் பாஜக மீது அதிருப் தியில் உள்ளதாக அக் கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார். இதன்மூலம் தனது கட்சியின் தலைவர் நிதின் கத்காரி மீது அத்வானி தாக்குதல் தொடுத்துள்ளார்,சமீபத்தில் அத்வானியின் அதிருப்தியையும் மீறி கட் காரியின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது. ஆர்எஸ் எஸ்சின் தலையீடு காரணமாக கட்காரிக்கு இந்தப் பதவி நீட்டிப்பு கிடைத்தது.ஏற்கனவே குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு தரப்பட்ட முக்கியத்துவத்தால் கட்சியில் அத்வானியின் முக் கியத்துவம் குறைந்து வரும் நிலையில், இப்போது கட் காரியும் அத்வானியின் கட்டுப்பாட்டில் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.இந் நிலையில் கட்சியின் செயல்பாடுகளை கடுமை யாக விமர்சித்து தனது இணையதளத்தில் எழுதியுள்ளார்.அத்வானி கூறியிருப்பதாவது:நாட்டு மக்கள் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் மோசமான செயல்பாடுகள் மற்றும் ஊழல்களால் அதன் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
ஆனால் அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.நமது செயல்பாடுகளால் நம் மீதும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இதனால் நாம் சுய பரிசோதனை செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம்.கட்சியில் இப்போது தன்னம்பிக்கை மிகக் குறைவாக உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் கிடைத்த தோல்வி, மாயா வதியால் நீக்கப்பட்ட ஊழல் பேர்வழிகளை பாஜக கட்சி யில் சேர்த்தது, கர்நாடகம் (எடியூரப்பா ஊழல் விவகாரம்), ஜார்க்கண்ட்டில் (எம்பிக்கள் விலை பேசப்பட்டது, மாநி லங்களவைத் தேர்தலில் கட்சிக்கே சம்பந்தமில்லாத ஒருவர் நிறுத்தப்பட்டது) கட்சி விவகாரங்களை கையாண்ட விதம் ஆகியவற்றால் மக்கள் நம் மீது நம்பிக்கை இழந் திருக்கிறார்கள்.ஊழலுக்கு எதிரான பாஜகவின் போராட்டத்துக்கு இந்த விஷயங்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டன.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திருத்தம்
நேற்றைய தீக்கதிர் (31.5.12) முதல்பக்கத்தில் வெளியாகியுள்ள ஜி.ராமகிருஷ்ணன் பேட்டியில் “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 124 டாலரிலிருந்து 117 டாலராக குறைந்துள்ளது” என திருத்தி வாசிக்கவும்.- ஆசிரியர்

Leave A Reply

%d bloggers like this: