அடுத்த கல்வியாண்டு முதல்9ஆம் வகுப்புக்குமுப்பருவ தேர்வு முறை
வேலூர், மே 31-அடுத்த கல்வியாண்டில் 9ஆம் வகுப்புக்கு முப்பருவ தேர்வு முறை அறிமுகப்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித் துறை இயக்குநர் மணி கூறினார்.தமிழகம் முழுவதும் 6,7,8ஆம் வகுப்பு பாட ஆசிரியர் களுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் 22 மையங் களில் நடைபெறும் இந்த பயிற்சி வியாழக்கிழமை (மே 31) மாலையுடன் முடிகிறது.பயிற்சி மையத்தில் ஆய்வு செய்த இயக்குநர் மணி, மத்திய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன இணை இயக்குநர் முத்து பழனிச்சாமி ஆகியோர் வாலாஜா, காட்பாடியில் உள்ள நூலகங்களைப் பார்வையிட்டனர்.மேலும், 6,7,8ஆம் வகுப்புகளுக்கு பாடப் புத்தகங்களை அனுப்பும் பணியையும், ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு பதிவுப் பணியையும் ஆய்வு செய்தனர்.இயக்குநர் மணி நிருபர்களிடம் கூறியதாவது;-இந்த கல்வியாண்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை மாண வர்களுக்கு முப்பருவ தேர்வு முறை அமல்படுத்தப் படுகிறது. அடுத்த கல்வியாண்டில் 9ஆம் வகுப்புக்கும், அதற்கு அடுத்த கல்வியாண்டில் 10ஆம் வகுப்புக்கும் முப் பருவ தேர்வு முறை அமல்படுத்தப்படவுள்ளது. பள்ளி களுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி முடிவடைந்து விட்டது என்றார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன். குமார் உடன் இருந்தார்.

டாஸ்மாக் தடை கோரி வழக்கு
சென்னை, மே 31-டாஸ்மாக் மதுபானக் கடைகளை தடை செய்யக் கேரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளது.கே.ஆர்.ராமசாமி என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், மக்களின் அனைத்து நலனையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், அதற்கு முரணாக உடல்நலனைக் கெடுக்கும் மதுபானத்தை டாஸ்மாக் மூலம் விற்பனை செய்வதற்கான உத்தரவை கடந்த 26.10.03 அன்று தமிழக அரசு பிறப்பித்தது. அன்றிலிருந்து இன்று வரை டாஸ்மாக் மூலம் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.அரசியல் சாசனத்தின் 47-ம் பிரிவின்படி, போதைப் பொருட்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் அதற்கு முரணாக மதுபானத்தை அரசே விற்பனை செய் கிறது. இதன் மூலம் சட்டம்- ஒழுங்கும் பாதிக்கப்படுகிறது.மதுவை அரசே விற்பனை செய்வதன் மூலம் அரசியல் சாசனம் மீறப்படுவதால், டாஸ்மாக் மூலம் மது விற்ப னைக்கு வகை செய்யும் அரசாணையை சட்டவிரோதமா னது என்று அறிவிக்க வேண்டும். புதிய டாஸ்மாக் கடை களைத் திறக்கவும் தடை விதிக்க வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது.இந்த மனுவை நீதிபதிகள் கே.வெங்கட்ராமன், சி.எஸ். கர்ணன் விசாரித்தனர். மனு மீதான விசாரணையை கோடை விடுமுறைக்குப் பின்னர் நீதிபதிகள் தள்ளி வைத்து உத்தர விட்டனர்.

பொறியியல் கவுன்சிலிங் மாற்றம்
சென்னை, மே. 31-பொறியியல் படிப்பிற்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் மாதம் 6-ந்தேதிக்கு முன் சமர்ப் பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான கவுன்சிலிங் ஜூலை மாதம் 2ம் தேதி முதல் நடைபெறும் எனவும் பொறியியல் படிப்புக் கான கவுன்சிலிங் ஜூலை மாதம் 9-ஆம் தேதி முதல் நடை பெறும் எனவும் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஜூலை மாதம் 5ம் தேதி மருத்துவ கவுன்சிலிங் நடை பெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் பொறியியல் கவுன்சிலிங்குக்கான தேதியும் தள்ளிப் போகும் எனத் தெரிகிறது. இதுகுறித்து பல்கலைக் கழக கூட்டத்தில் பேசி முடிவெடுத்தபின் தேதி அறிவிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: