எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் சகிப்புத்தன்மைக்கு இடமளிக்காதது பாஜக தலைமையிலான அரசின் சாதனை யாகும் – பாஜக தலைவர் எல்.கே.அத்வானி.ச.சா – காந்தஹார்ல கொண்டு போய் பயங்கரவாதிகள பத்திரமா இறக்கிவிட்டீங்களே… அதுக்கு அப்புறமா…??
* * *
வரவிருக்கும் இடைத்தேர்தலில் ஆதாயம் பெற அனுதாபம் தேடிக்கொள்ளும் பிரச்சனைகளை ஒய்எஸ்ஆர் குடும்பத் தினர் கிளப்புகிறார்கள்-ஆந்திர முதல்வர் கிரண்குமார்ரெட்டி.ச.சா – இடைத்தேர்தல மனசுல வெச்சுதான் ஜெகன் மோகன்ரெட்டி மேல சிபிஐ-ய ஏவி விட்டுருக்கீங்களா…??
* * *
ஊழலிலிருந்து தப்பிக்க மன்மோகன்சிங்கைக் கேடயமாக காங்கிரஸ் பயன்படுத்துகிறது – சமூக ஆர்வலர் குழுவின் சாந்தி பூஷன்.ச.சா – உங்க குழுலயும் பலர், கேடயமாத்தான் இந்த ஊழல் எதிர்ப்புக்குழுவ பயன்படுத்துறாங்களாமே…??
* * *
அந்நிய முதலீட்டை ஈர்க்க பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது – செய்தி.ச.சா – இந்தக் கட்டுப்பாடுகள்தான் உலக நெருக்கடில ருந்து ஓரளவு காப்பாத்துச்சு… இப்ப இதயும் எடுத்துட்டா கூடுதல் நெருக்கடிதான்…

Leave A Reply

%d bloggers like this: