சென்னை, மே 31-வரலாறு காணாத அளவிற்கு மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தியதை எதிர்த்து நாடு தழுவிய எதிர்ப்பியக்கத்திற்கு இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்தன. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பரவலாக பெட்ரோல் விலை உயர்வு எதிர்ப்பியக்கம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-கோவை, திருப்பூர், கன்னியா குமரி போன்ற மாவட்டங்களில் முழுமையாகவும் மற்ற மாவட்டங் களில் பகுதியாகவும் கடையடைப்பு நடந்துள்ளது. கோவை, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் தொழில்நிறுவனங்கள் முழுமை யாக இயங்கவில்லை. பெரும்பகுதி யான ஆட்டோக்கள், தனியார் வாக னங்கள் இயங்கவில்லை. ரயில் மற் றும் சாலை மறியலில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் வாலிபர், மாணவர், மாதர், சிஐடியு உள்ளிட்ட அமைப்பு களைச் சார்ந்த சுமார் 15,000 பேர் கைது செய்யப்பட்டனர். விருதுநக ரில் அமைதியான முறையில் ரயில் மறியலில் ஈடுபட்ட வாலிபர் மற்றும் மாணவர் சங்க உறுப்பினர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக் கிறது.மத்திய அரசின் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து நடை பெற்ற மாநிலம் தழுவிய கடைய டைப்பு, மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற இயக்கங்களில் பங்கு பெற் றோரையும், ஆதரித்த மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு பாராட்டுகிறது.விலை உயர்வு உள்ளிட்ட மக்க ளைத் தாக்கும் நவீன தாராளமயப் பொருளாதாரக்கொள்கையை எதிர்த்து பல வடிவங்களில் போராட்டத்தை தொடர வேண்டு மென அனைத்துப்பகுதி மக்களை யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகிறது.

Leave A Reply

%d bloggers like this: