பெங்களூர்,மே 31-கர்நாடகா மேலவைத் தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் மீதான வரி யைக் குறைக்கும் வாய்ப்பு கள் குறித்து மாநில அரசு பரிசீலிக்கும் என்று முதல் வர் சதானந்தா கவுடா கூறி னார். கர்நாடகாவில் மேல வைத் தேர்தல் நடைபெறு வதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் செயல் பாட்டில் உள்ளதால் இது பற்றி இதற்கு மேல் கூற முடி யாது என்றும் அவர் கூறி யுள்ளார். அண்டை மாநில மான கோவாவில் பெட்ரோல் மீது விதிக்கப்படும் மாநில வரி குறைக்கப்பட்டது போல் கர்நாடகாவிலும் குறைக்கப் படவேண்டும் என்று, பாஜக செய்தித் தொடர்பாளர் டி.ரவி வலி யுறுத்தினார். அதன் பின்னணியில் முதல்வர் இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.