கடலூர், மே 31-என்எல்சி ஒப்பந்த தொழி லாளர்களின் போராட்டத் திற்கு ஆதரவாக உடலூரில் அனைத்துத் தொழிற்சங்கத் தின் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.என்எல்சியில் பணிபுரி யும் 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த 40 நாட்களாக வேலை நிறுத் தப் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். இவர் களின் கோரிக்கையான பணிநிரந்தரம், சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்ற நிர்வாகம் தயாராக இல்லை.மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு கோரிக்கை களை நிறைவேற்றகோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஏஐடியுசி மாவட்டத் தலைவர் என்.மாரியப்பன் தலைமை தாங்கினார். தொமுச சார்பில் பழனி வேல், சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன், துணைத் தலைவர் ஏ.பாபு, என்எப்டிஇ சார்பில் ராஜேந்திரன், ஏஐபிஇஏ சார்பில் ஸ்ரீதரன், ஏஐயூடி யூசி சார்பில் நாராயணசாமி உள்ளிட்டோர் பேசினர். குளோப் நன்றி கூறினார்.

Leave A Reply