ஜான்பூர்(உத்தரப்பிரதே சம்): உத்தரப்பிரதேசத்தில் டூன் எக்ஸ்பிரஸ் ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்ட தில் 6 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந் தனர்.ஹவுராவில் இருந்து டேராடூன் செல்லும் டூன் எக்ஸ்பிரஸ் ரயில் வியாழ னன்று மதியம் 1 மணி அளவில் உத்தரப்பிரதேசம் மாநிலம் மிஷ்ரவன் ரயில் நிலையத்தின் அருகே சென்று கொண்டிருந்தது.ஜான்பூர் ஜங்ஷனை நெருங்கிய நிலையில் ரயி லில் இணைக்கப்பட்டிருந்த எஸ்-6, 7,8,9 மற்றும் எஸ். இ.-1 ஆகிய 5 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன. இதில் ரயிலில் பயணித்த அனைவ ரும் இங்கும் அங்குமாக தூக்கிவீசப்பட்டனர்.சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடு பட்டனர். இக்குழுவினர் 6 பேரை இறந்த நிலையில் மீட்டதாக வும், 50க்கும் மேற்பட்டோ ரை காயமடைந்த நிலையில் மீட்டதாகவும் கூறினர். கடந்த 10 நாட்களுக்கு முன் இதே இடத்தில் நடை பெற்ற ஒரு ரயில் விபத்தில் 24 பேர் பலியானது குறிப்பிடத் தக்கது.

Leave A Reply

%d bloggers like this: