கடும் விலைவாசி உயர்வால் தாக்கப்பட் டுள்ள மக்களுக்கு ஓரளவுக்கேனும் பாதுகாப் பாக இருப்பது பொதுவிநியோக முறைதான். தமிழகத்தில் பொது விநியோக முறை மூலம் மாதம் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப் படுவது, பல்வேறு மாநிலங்களில் மானிய விலை யில் வழங்கப்படுவது உள்ளிட்ட நடவடிக்கை கள் காரணமாக பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைகிறார்கள். அப்படியெல்லாம் ஆறுதலாக இருக்க விடமாட்டோம் என உறுதி எடுத்துக் கொண்டது போல் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு செயல்படுகிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் உண்மையில் அடித்தட்டு மக்களுக்கு பாதுகாப் பற்ற ஒரு நடைமுறையை கொண்டுவர மத்திய அரசு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது. உலக வங்கி போன்றவற்றின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து, பொது விநியோக முறையை முடி ந்த அளவிற்கு சீர்குலைக்கும் திருப்பணியில் அரசு இறங்கியிருக்கிறது.
வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே உண வுப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்ற ஒரு கொள்கையை உருவாக்க மத்திய அரசு திட்ட மிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. வறு மைக் கோட்டுக்கு மேலே உள்ள அனைத்து வகையான குடும்பங்களையும் இந்த உணவுப் பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே தள்ளி விடுவது என்றும் அரசு திட்டமிட்டு வருவதாக அந்தச் செய்தி கூறுகிறது.நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ள தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட முன்வரைவில் இது ஒரு முக்கியமான மாற்றமாக முன்வைக்கப்பட்டிருக் கிறது. நிலைக்குழு என்ன முடிவுக்கு வரப்போ கிறது என்பது இனிமேல்தான் தெரிய வரும்.இவ்வாறு பொதுவிநியோக முறையில் பலன் பெறும் ஏழைக் குடும்பங்களின் எண்ணிக்கை யை சுருக்குவதற்கு பல மாநில அரசுகள் எதிர் ப்பு தெரிவித்துள்ளன.
பொது விநியோக முறை யாக ஒரே சீரானதாக நாடு முழுவதும் செயல்படு த்த வேண்டும் என்று வலுவான முறையில் வலி யுறுத்தப்பட்டு வருகிறது. அதை சிறிதும் பொருட் படுத்தாமல், ஏற்கெனவே இருக்கிற பாது காப்பு வளையத்தின் சுற்றளவைச் சுருக்குவது என் பதில்தான் மத்திய அரசு பிடிவாதம் காட்டு கிறது.இது நடைமுறையில் மாநில அரசுகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். ஒன்று, பெ ரும்பகுதி மக்களுக்கு பொது விநியோக முறை யின் பலன் கிடைக்காது என அறிவிக்க வேண் டியிருக்கும். அல்லது, மத்திய தொகுப்பிலிருந்து இனி குறைந்த அளவிலேயே அரிசியும் கோது மையும் கிடைக்கும் என்பதால், அதிக விலை யில் வெளிச் சந்தையிலிருந்து கொள்முதல் செய்து மானிய விலையில் வழங்க வேண்டிய சுமையை மாநில அரசுகள் ஏற்க வேண்டியிருக் கும். காலப்போக்கில் இத்தகைய ஏற்பாடு என் பது, பொது விநியோக முறையை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவதில்தான் போய் முடியும் என்ப தை விளக்க வேண்டியதில்லை.வறுமையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு உரிய ஆக்கபூர்வ நடவடிக்கைகள் குறித்து சிந்திக்க வோ, செயல்படுத்தவோ அரசும், திட்டக்குழுவும் தயாராக இல்லை. மாறாக, வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கையை செயற்கையான முறையில் குறைத்துக்காட்டி, மத்திய அரசின் நிதிப் பொறுப்பை வெட்டிச் சுருக்குவதிலேயே கவனம் செலுத்தப்படுகிறது. வறுமைக்கோடு அளவு என்பதே ஒரு போலியான ஏற்பாடாக வந் துள்ள நிலையில், ஏழைகளில் பெரும்பகுதியினர் விலைவாசியின் கொடூரத் தாக்குதலில் சிக்க வைக்கப்படுகிறார்கள். இதற்கு எதிரான ஆவே சப் போராட்டங்கள் நாடு தழுவிய அளவில் வெடிப்பதுதான் மத்திய அரசின் வஞ்சகப் போக் கைத் தடுத்து நிறுத்த முடியும்.

Leave A Reply

%d bloggers like this: