புதுதில்லி, மே 31-2011- 12ம் நிதியாண்டின் மார்ச் மாதத்துடன் முடி வடைந்த 4வது காலாண் டில் இந்தியாவின் பொரு ளாதார வளர்ச்சி விகிதம் 5.3 சதவீதமாக சரிவடைந்துள் ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 7.8 சதவீதமாக இருந்தது.கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது மிகப்பெரும் சரிவாகும்.ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி உள்பட பல்வேறு காரணங் களால் 9 ஆண்டுகளில் இல் லாத அளவுக்கு வளர்ச்சி விகிதம் வெகுவாகக் குறைந் துள்ளது. முன்னதாக இந்தக் காலாண்டில் இந்திய பொரு ளாதார வளர்ச்சி 6.1 சதவீத மாக இருக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், அது 5.3 சதவீதம் அளவுக்கு தேய்ந்துவிட்டது.மேலும் 4வது காலாண் டில் வேளாண்துறையில் உற்பத்தி 1.7 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. தொழிற் துறை உற்பத்தி 3 சதவீதம் சரிவடைந்துள்ளது.2011-12ம் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக சரிவடைந்துள் ளது. இது 2010-11ம் நிதி யாண்டை விட 1.9 சதவீதம் குறைவாகும்.நடப்பு காலாண்டிலும் இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து நெருக்கடியி லேயே இருக்கும் என்று தெரிகிறது.
பங்குச் சந்தைபெரும் சரிவு
பொருளாதார வளர்ச்சி சரிவு விவரம் வெளியானதை யடுத்து வியாழனன்று இந் திய பங்குச் சந்தைகளும் பெரும் வீழ்ச்சியைச் சந் தித்தன.மும்பைப் பங்குச் சந்தை குறியீட்டு எண் சென் செக்ஸ் 188 புள்ளிகள் சரிந் துள்ளன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 54 புள்ளி கள் குறைந்துள் ளது.சில ஆண்டுகளுக்கு முன் 9 சதவீதம் அளவுக்கு பொரு ளாதார வளர்ச்சியை எட்டி வந்த இந்தியா, இப்படி 5.3 சதவீதம் அளவுக்கு சரிந் துள்ளது பெரும் கவ லையை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.