இடைநீக்கம்ஐந்து தடகள வீரர்களை தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு முகமை இடைநீக்கம் செய்துள்ளது. ரஞ்சிதா மகந்தா (ஒடிசா), சபீனா (கர்நாடகா), அவின்குமார் (கர்நாடகா), ஜக்தீஷ் படேல் (உ.பி) தரம்வீர்சிங் (ஹரியானா) ஆகிய ஐவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஐவரும் ஸ்டீராய்ட் பயன்படுத்தியுள்ளனர். இவர்களில் ஜக்தீஷ் படேல் தவிர மற்றவர்களுக்கு இரண்டாண்டு தடைவிதிக்கப்பட்டது. 16 வயதே நிரம்பிய இளம்வீரர் ஜக்தீஷ் படேல் மீது இரக்கப்பட்டு நீதிபதி (ஓய்வு) தினேஷ் தயால் ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்துள்ளார். ஜக்தீஷ் படேலின் வயது, கிராமப் பின்னணி, அவருடைய கல்வியறிவு ஆகியவற்றின் அடிப்படையிலும் டெகாபோலின் ஊசி மருந்து போட்டதற்கான மருத்துவரின் மருத்துவக் குறிப்பையும் அவர் அளித்ததால் அவருக்கு தண்டனை குறைக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: