கோவை, மே 30-கோவையில் புதனன்று தங்க நகைத் தொழிலாளர் யூனியன் சார்பில் சிஐடியு அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது.கோயம்புத்தூர் தங்கநகைத் தொழிலாளர் யூனியன் சங்கத்தின் சார்பில் சிஐடியு அமைப்பு தினம் மற்றும் தோழர் கே.ரமணியின் 6வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. தியாகி குமரன் மார்க்கெட் அலுவலகம் முன்பாக வைக்கப்பட்டிருந்த தோழர் கே.ரமணியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இவ்விழாவிற்கு எம்.ஞானசேகரன் தலைமை வகித்தார். எஸ்.பி.கிருஷ்ணன், மருதாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தங்க நகை தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பி.சந்திரன் சங்கக்கொடியை ஏற்றி வைத்தார். மேலும், தோழர் கே.ரமணியின் பணிகளை நினைவு கூர்ந்து, அவரது பணிகளை நாம் தொடர வேண்டும் என பேசினார்.இந்நிகழ்ச்சியில் மணிகண்டன், பி.சி.சந்திரன், டி.கே.ரவீந்திரன், செந்தில், பலவேசம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர். விழாவில் 50 க்கும் மேற்பட்டோர்கலந்துகொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: