‘‘ மாங்காய் லாரி கவிழ்ந்து 12 பேர் மரணம். 34 பேர் படுகாயம். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே சவுளூர் கிராமத்தில் 8 பேர் சடலம் ஒரே இடத்தில் எரிப்பு. அமைச்சர் ஆறுதல் கூறினார். அரசு நிவாரணம் அறிவுப்பு’’ இவையெல்லாம் செய்திகளாக வந்துவிட்டன. விபத்தில் சிக்கிய நபர்களைச் சார்ந்த ஏழைக் குடும்பங்கள் நிலை குலைந்துள்ளன என்பது தெரியாத செய்தி. படு காயமடைந்தோருக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முடியாமல் பல குடும்பங்கள் பரிதவிப்பில் உள்ளன. இது குறித்து ஒரு நேரடி ரிப்போர்ட்.கிருஷ்ணகிரியில் உள்ள சந்தியா அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவி உமா (22), தனது படிப்புக்காக மாங்காய் சுமக்கும் பணிக் குச் சென்றார். பணி முடிந்து லாரியில் பயணித்த போது விபத்தில் உயிரிழந்தார். இவரது தங்கை சத்தியா (20) பர்கூர் அரசு மகளிர் கல்லூரி மாணவி. விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் உயிர் பிழைத்தவர்.
சேலம் கோகுலம் மருத்துவ மனையில் 45 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்ய முடியாமல் வீடு திரும்பியுள்ளார். அக்கா உமா உயிரிழந்த தகவலை இவரிடம் சொல்ல முடியாமலும் தொடர் சிகிச்சை அளிக்க வழி தெரியாமலும் பரிதவிக்கிறார் இவர்களது தந்தை தேவேந்திரன்.சந்தியா கல்லூரி மாணவி செல்வி (22) பி.ஏ., தமிழ் மூன்றாம் ஆண்டு தேர்வை எழுதி விட்டு பி.எட் படிப்புக்கு பணம் சேர்க்க லாரி யில் ஏறியவர். பிணமாக வீடு திரும்பினார். இவரது தங்கை உமா (21) கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி மாணவி. இந்த விபத்தில் இவரது இடுப்பு, கை, கால் உடைந்துள்ளது. தருமபுரி ஓம் சக்தி மருத்துவமனையில் 90 ஆயி ரம் ரூபாய் செலவழித்து இன்னமும் அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.
இவர் களோடு 5 பெண்களுக்கு தந்தையான சின்னப் பையன் கூலிவேலை செய்து விழி பிதுங்கி நிற் கிறார்.கதிரிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பிலிருந்து 10ஆம் வகுப்புக்கு செல்ல வேண்டியவர் சோனியா காந்தி. விபத் தில் உயிரிழந்து விட்டார். இவரது அக்கா ஷாலி னிக்கு (+2 மாணவி) கால் முறிந்து கிருஷ் ணகிரி அருண் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரை 80 ஆயிரம் ரூபாய் வரை செலவாகியுள்ளது. இவர்களது தந்தை காவேரி அண்மையில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்.சிவரஞ்சனியும் (15) கதிரிபுரம் அரசுப் பள்ளி மாணவி. தந்தை ராஜாமணி, தாய் மாரி ஆகி யோருடன் லாரியில் ஏறியவர். விபத்தில் தந்தையைப் பறிகொடுத்துவிட்டார். தாயும் மக ளும் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவை எதிர்பார்த்திருந்த ஞானசவுந்தர் இந்த விபத்தில் உயிரிழந்தார்.
9ஆம் வகுப்புக்கு செல்ல வேண்டிய அந் தோணியுடன் அவரது தந்தை சேட்டு, +2 படிக்க வேண்டிய அக்கா பவித்ரா, பாலக்கோடு அருகே பாறையூரைச் சேர்ந்த மாமா மகளும் 11ஆம் வகுப்புக்குச் செல்ல வேண்டியவருமான சந்தனா (கோடை விடுமுறையை கழிக்க வந்த வர்) ஆகியோர் லாரி ஏறினர். இதில் அந் தோணியும் சந்தனாவும் உயிரிழந்தனர். சேட்டுவும் பவித்ராவும் படுகாயத்துடன் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.ஐஸ் விற்கும் சரவணனின் மகன் அருள் 10ஆம் வகுப்புக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர். படுகாயமடைந்த இவரை மேல் சிகிச் சைக்காக பெங்களூரு ஸ்பர்ஸ் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர்.
3 லட்சம் ரூபாய் பணம் கட்டச் சொன்னார்களாம். முடியாததால் சேலம் கோகுலம் மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். இங்கும் ஒரு லட்சம் ரூபாய் கட்டிய பிறகு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேலும் 2 லட்சம் ரூபாய் கேட்கிறார்களாம்.விபத்து நடந்த தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டு நர்கள் 10ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை கறந்து விட்டதாக ஆயப்பன் தெரிவித்தார். இது போன்ற துயர சம்பவங்களின்போது தனி யார் ஆம்புலன்ஸ்களும், மருத்துவமனைகளும் பணம் பறிக்கும் வாய்ப்பை அரசே ஏற்படுத்திக் கொடுப்பதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர். கோடிக்கணக்கான ரூபாயை மருத்துவ வசதிக் காக அரசு செலவிடுகிறது. காப்பீட்டுத் திட்டம் உள்ளது. 108 ஆம்புலன்ஸ் வசதி உள்ளது. ஆனால் ஏழைகளுக்கு அவை உதவுவதில்லை என்பதையே இந்த விபத்து உணர்த்தியுள்ளது.

Leave A Reply