புதுதில்லி, மே 30-பிறந்ததேதி சர்ச்சை, பாதுகாப்புத்துறையில் கொள்முதல் ஒப்பந்தங் களை பெற, தனியார் நிறு வன இடைத்தரகர்கள் குறுக்கீடு, பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு லஞ் சம் கொடுக்க முன்னாள் ராணுவ அதிகாரிகள் முயற்சி என பல்வேறு பர பரப்புகளை ஏற்படுத்தி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட் டணி அரசுக்கு கலக்கத்தை ஏற்படுத்திய ராணுவத் தளபதி வி.கே.சிங் வியாழக் கிழமையன்று (மே 31) ஓய்வு பெறுகிறார்.62 வயது ஜெனரல் சிங் 42 ஆண்டு ராணுவ சேவையை நிறைவு செய்து சீருடைக்கு விடை கொடுக்கிறார். அவரைத் தொடர்ந்து தற்போதைய கிழக்கு தரைப் படைத் தளபதியான ஜென ரல் விக்ரம் சிங், புதிய ராணு வத் தளபதியாக பொறுப் பேற்கிறார். அவர் 2 ஆண்டு 3 மாதம் இப்பதவியில் இருப்பார்.ஜெனரல் வி.கே.சிங், கடந்த 2010 மார்ச் 31 அன்று ராணுவத் தளபதியாக பொறுப்பேற்றார். மிக நேர்மையான, உறுதியான கறைபடியாத அதிகாரி என்ற நிலையை பெற்ற அவர் பிறந்த தேதி சர்ச்சை தொடர்பாக அவரது பெயர் இந்திய பாதுகாப்புத் துறை யில் பரபரப்புடன் கவனிக் கப்பட்டது.வி.கே.சிங் பிறந்த தேதி குறித்து 2 விபரங்கள் ராணுவ ஆவணங்களில் உள்ளன. ராணுவ செயலாளர் பிரி வில், அவரது பிறந்த தேதி மே 1950, 10 என்றும், ராணுவ ஜெனரலின் நிர்வாக உதவி யாளர் அலுவலகத்தில் அவ ரது பிறந்த தேதி மே 1951, 10 என்றும் மாறுபட்டு இருந் தன.தனது பிறந்த ஆண்டை, 1951 என எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அவரது வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.இந்த நிலையில் பாது காப்புத்துறை அமைச்சகத் துடன் எந்தவித தவறான புரிந்துணர்வும் இல்லை என சர்ச்சை வேகத்தை கட்டுப்படுத்த வி.கே.சிங் புனேவில் புதன்கிழமை கூறினார்.

Leave A Reply