மேட்டூர், மே. 30-மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கடந்த 10ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் கன்வேயர் பெல்ட் மற்றும் அதை தாங்கி நின்ற இரும்பு தூண்கள் சீர்குலைந்து கீழே சரிந்து விழுந்தது. 4 யூனிட்டு களும் தீ விபத்தில் சேதம் அடைந்ததால் முழுமை யாக 840 மெகாவாட் மின் சார உற்பத்தி தடைப்பட்டது. இதையடுத்து போர்க் கால அடிப்படையில் இரும்பு தூண்கள் மற்றும் கன்வே யர் பெல்ட்டுகள் அமைக் கும் பணி தீவிரமாக நடந்து பணிகள் முடிவடைந்தது. இதையடுத்து கடந்த 28ம் தேதி 3-வது யூனிட் செயல் பட தொடங்கியது. செவ்வா யன்று (மே 29) காலை 1-வது யூனிட்டும் செயல்பட தொடங்கியது. பின்னர் படி படியாக மாலையில் 4-வது யூனிட்டும் செயல்பட தொடங் கியது. தற்போது மேட்டூர் அனல் மின்நிலையத்தில் செயல்பட தொடங்கிய 3 யூனிட்டுகளில் இருந்தும் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2-வது யூனிட் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதில் விரைவில் மின்உற்பத்தி தொடங்கும். இந்த 4 யூனிட்டுகளும் செயல் பட்டால் வழக்கம் போல் 840 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். மின் உற்பத்தி தொடங்கியதால் செங்கல் சூளைகள், சிமெண்ட் ஆலை களுக்கு உலர் சாம்பல் லாரி கள் மூலம் கொண்டு செல் லும் பணி தொடங்கியது. 4 யூனிட்டுகளும் முழுமை யாக செயல்பட தொடங்கி னால் ஒரு நாளைக்கு 4 ஆயி ரம் டன் உலர் சாம்பலும், ஆயிரம் டன் ஈரச்சாம்பலும் வெளியேற்றப்படும். உலர் சாம்பல் கொண்டு செல்லும் பணியில் ஏராளமான தொழி லாளர்கள் ஈடுபட்டு வரு கிறார்கள். அவர்கள் தீ விபத் தின் காரணமாக மின் உற் பத்தி தடைப்பட்டதால் வேலை இழந்தனர். தற்போது மின் உற்பத்தி தொடங்கி இருப்பதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: