சென்னை, மே 30 –
சென்னை மற்றும் புற நகர் முறைசாரா தொழி லாளர் சங்கத்தின் சார்பில் எல்ஐசி ஜனஸ்ரீ பீமயோ ஜனா குழுக் காப்பீடு திட் டத்தின் கீழ் பெறப்பட்ட கல்வி உதவித் தொகை வழங் கும் நிகழ்ச்சி தாம்பரம், சைதாப்பேட்டை பகுதிக ளில் நடைபெற்றது.தாம்பரம் பகுதியில் 20 பயனாளிகளுக்கு 17ஆயிரத்து 200 ரூபாயை சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எம்.குமார் வழங் கினார். சுசீலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி யில் பகுதிச் செயலாளர் யு. அணில்குமார், மாவட்ட துணைத்தலைவர் வசந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.சைதாப்பேட்டை பகுதி செயலாளர் ஏ.சுந்தர் தலை மையில் நடைபெற்ற நிகழ்ச் சியில் 12 பயனாளிகளுக்கு 10ஆயிரத்து 320 ரூபாயை மாவட்ட பொதுச் செயலா ளர் வி.தாமஸ் வழங்கினார். பகுதி பொருளாளர் எப். ஜெரோம், ஆட்டோ சங்க தலைவர் ராமலிங்கம் உள் ளிட்டோர் கலந்து கொண் டனர்.

Leave A Reply