புதிய பொருளாதாரக் கொள்கையின் தொழில் நடைமுறையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, மத்திய மற்றும் மாநில அரசு களின் வரிச்சலுகைகள், கட்டமைப்பு உதவி களுடன் செயல்பட்டு வருகிறது. நமது நாட் டில் 389 சிறப்பு பொருளாதார மண்டலங் கள் பல லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களில் துவங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் (1894) கீழ் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் மிகவும் குறைந்த விலையில் சிறு மற்றும் குறு விவசாயிகள், பழங்குடியினர், கடலோரப் பகுதி மக்களிடம் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டது. அவர் களுக்கு உரிய மாற்று வாழ்வுரிமை திட்டங் களோ அல்லது புனரமைப்பு முயற்சிகளோ கூட மேற்கொள்ளப்படவில்லை. காலங்கால மாக நிலத்தை சாகுபடி செய்து வந்த விவ சாயக் குடும்பங்கள் தங்கள் நிலத்தை இழந்து தெருவில் நிற்கும் நடைமுறைச் சூழல் நாட் டில் நிலவுகிறது. நிலத்தை இழந்தவர்கள் பலர் குறைந்த கூலித் தொழிலாளர்களாக நகர்ப்புற சேரிகளில் தஞ்சம் புகும் நிலையே நாட்டில் நிலவுகிறது. இவ்வாறு நமக்கு உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகள் வீடு களை இழந்து, வாழ்வுரிமைகளை இழந்து சாகும் பரிதாப நிலைக்கு புதிய தொழில் வளர்ச்சி அவர்களை தள்ளியது.
மறுபுறம், கடந்த ஒன்பதாவது திட்டக் காலம் முதல் நிர் ணயம் செய்த வேளாண் இலக்குகளை அடைய முடியாத நடைமுறைச் சூழலே நாட்டில் நிலவுகிறது. தற்போதைய 11வது திட் டக்காலத்தி லும் வேளாண் வளர்ச்சி 3 சதவீதம் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்ட 4 சதவீத இலக்கை பெற முடியவில்லை. இதனால் உணவு தானியப் பயன்பாடு என்பது புதிய பொருளாதாரக் கொள்கை அமல்படுத்த துவங் கிய காலத்தில் 510 கிராம் என்ற அளவில் இருந்து 438 கிராம் என்ற அளவிற்கு குறைந்து வருகிறது. விவசாய நிலங்களை பறிமுதல் செய்து தொழில் வளர்ச்சி என்ற போர்வையில், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் வாயிலாக இந்திய பெருநிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங் களுக்கு வழங்கியதால் ஏற்படுத்தப்பட்ட விவ சாயத் துறை வீழ்ச்சி. மறுபுறம் முக்கிய விவசாயப் பயிர்களில் உற்பத்திப் பெருக்கம். தேவையின் அடிப்படையில் இல்லாத காரணத்தால் உணவுதானிய விலை வீக்கத்தை கட்டுப் படுத்த முடியாத நடைமுறைச் சூழல் நிலவு கிறது. தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின் புள்ளி விவரங்களின்படி கடந்த 1995 முதல் 2010 ஆகிய பத்தாண்டுகளில் 2லட்சத்து 56 ஆயிரத்து 913 விவசாயிகள் நாடு முழுவதும் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட் டுள்ளனர். தற்போதைய மத்திய மற்றும் மாநில அரசுகள் பின்பற்றி வரும் முதலாளித்துவச் சார்பு வேளாண் மற்றும் தொழில் வளர்ச்சி கொள்கைகளே இத்தகைய மிகப்பெரிய வாழ்க்கைத்தர வீழ்ச்சிகளுக்கு முக்கிய காரணம். இத்தகைய நடைமுறைச் சூழலில் மத்திய அரசின் வர்த்தகத்துறை, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மேலும் சலு கைகள் வழங்க புதிய கொள்கை முடிவுகளை மற்றும் நடைமுறைகளை உருவாக்கி செயல் படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
விற்பனைக்கு உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்கள்
தற்போது நாடு முழுவதும் குறைந்த விலையில் விவசாயிகளிடம் கையகப்படுத் தப்பட்ட விவசாய நிலங்கள் மானிய விலை யில் பல அரசின் உருவாக்கப்பட்ட கட்ட மைப்பு வசதிகளுடன் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு வழங்கப்பட்டன. இவ் வாறு வழங்கப்படும் நிதி சலுகைகள் குறித்து அப்போது நிதித் துறையும், வர்த்தகத்துறையும் மோதிக் கொண்டது, பரபரப்பு செய்தியாக பல முதலாளித்துவ ஏடுகளில் வெளியிடப் பட்டது. நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சி முக்கியம் என்ற பெய ரில் பல ஆயிரம் கோடி ரூபாய் தொழில் மானியங் களுடன் செயல்பட துவங்கிய சிறப்பு பொருளா தார மண்டலங்களில் வெகுசில மட்டுமே செயல்படத் துவங்கியது. தங்களின் தேவைக்கு மிகவும் அதிகமாக நிலங்களை பெற்ற தொழில் நிறுவனங்கள், விவசாயிகள், விவ சாயிகள் சங்க தொடர் போராட்டங்களால் மூடப் பட்டது. மறுபுறம் தொழில் துவங்கிய நோக் கமே இல்லாமல் சிறப்பு பொருளாதார மைய அனுமதி பெற்ற பெரு நகரங்களுக்கு அருகில் உள்ள நிலங்கள் பலவற்றில் தொழிற்சாலை கள் துவங்கப்படாமல் அடுக்குமாடி குடியிருப் புகள், வர்த்தக மையங்கள் துவங்கும் முயற் சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு மிகவும் குறைந்த விலையில் நிலங் களை பெற்று மிக அதிக விலைக்கு மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் முயற்சிகள் ஒரு புறம் இருக்க, உலக பொருளாதார மந்த நிலை அடிப்படையில் வளர்ச்சி குறைந்து வரும் உற் பத்தி மற்றும் சேவைத் துறைகளை கருத்தில் கொண்டு மேலும் அதிகளவு பொருளாதாரச் சலுகைகளை மத்திய அரசிடம் பெற இந்திய பெருமுதலாளிகள், பன்னாட்டு தொழில் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள் பல்வேறு வழிகளில், தளங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி புதிய வரி விதிப்புகள், மானிய வெட்டுகளை மேற்கொண்டு ஏழை, எளிய மக்களின் மேல் வரிச் சுமைகளை ஏற்றி வரும் மத்திய அரசு, மேலும் சிறப்பு மையங்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கினால் இவற்றினால் ஏற்படும் பொருளாதாரச் சுமைகளை ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களே சுமக்க வேண்டி வரும் என்பதே நடைமுறை உண்மை. இத்தகைய புதிய வரிச் சலுகைகள் வாயிலாகவே மீண்டும் சிறப்பு பொருளாதார மையங்களை கவர்ச்சிப் பொருளாக்கி விற்பனை செய்ய முடியும்; நாட்டின் தொழில் வளர்ச்சியை பெருக்கச் செய்ய முடியும் என்ற வாதம் மிகப்பெரிய முதலாளித்துவ மோசடி திட்டமாகும்.
மேலும் வரிச்சலுகை கள் பெற்று இந்திய தொழிலாளர் மற்றும் இதர சட்டங்களை காலில் போட்டு மிதித்து விட்டு, மேலும் தங்களின் லாப வேட்கையை பெருக் கிக் கொள்ளும் பொருளாதார மற்றும் வர்த்தக முயற்சிகளுக்கு மத்திய அரசு துணை போவது நமது நாட்டு மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகச் செயலாகும். நாட்டில் 60 சதவீதம் மக்கள் ஈடுபட்டு வருகின்ற, வீழ்ச்சியின் பிடி யில் உள்ள விவசாயத்துறைக்கு மானியங்கள், நிதி சலுகைகள் வழங்காமல் மேலும் பெரும் பணக்காரர்களுக்கு உதவும் பொருளாதார முயற்சிகள் ஏழைகளை மேலும் ஏழைகளாக் கவும் பணக்காரர்களை மேலும் உலக பணக் காரர்களாக்கவும் உருவாகச் செய்யும் என்ப தில் சந்தேகம் இல்லை.

Leave A Reply

%d bloggers like this: