கொச்சி, மே 30-இந்திய கடல் எல்லைப் பகுதியிலேயே இத்தாலி கப்பலின் பாதுகாவலர்கள் கூட்டத்தில் 2 இந்திய மீன வர்கள் இறந்துள்ளனர். எனவே அந்த இத்தாலி வீரர் கள் இந்தியச் சட்டமுறை யை எதிர்கொள்ள வேண் டும் என கேரள உயர்நீதி மன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது.இந்தஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதியன்று கொச்சி கடல்பகுதியில் இத் தாலி வர்த்தகக் கப்பலான என்ரிகா லெக்சியின் 2 பாது காப்பு வீரர்கள் சுட்டதில் இந்தியாவின் 2 மீனவர்கள் உயிரிழந்தனர்.சோமாலிய கடற்கொள் ளையர்கள் என நினைத்து தவறுதலாக சுட்டதாக தெரி விக்கப்பட்டது. மீனவர்கள் கொலை வழக்குத் தொடர் பாக இத்தாலி வீரர்கள் மாசி மிலானோ மற்றும் சல்வடோர் கிரோன் மீது எப்ஐஆர் பதிவு செய்யப் பட்டது. இதனை இந்த வீரர் களும் இத்தாலிய தூதரக அதிகாரி கிம்பாலோ குடி லோவும் எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு வை தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை நீதிபதி பி. எஸ்.கோபிநாதன் தள்ளு படி செய்ததுடன் வழக்கு செலவினமாக குற்றம்சாட் டப்பட்ட 2 வீரர்களும் தலா ரூ.1 லட்சம் செலுத்த வேண் டும் என்றும் உத்தரவிட்டார்.2012 பிப்ரவரி 15 அன்று நடந்த துப்பாக்கிச்சூடு எல் லையை பகிர்ந்துகொள் ளும் பகுதியிலேயே (சிஇசட்) நடந்துள்ளது. இதுபிரத்யேக பொருளா தார மண்டலத்தில் (இஇ இசட்) வருவதாகவும் உள் ளது. சிஇசட் என்ற எல் லைப்பகிர்வு பகுதிநிர்வாக நீர் எல்லையான 24 கடல் மைலுக்கு அருகே அல்லது அதனை கடந்ததாக இருக் கும்.எனவே மனுதாரர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் பாய்வதற்கு உரிய நிலை உள்ளது. கடல்சார் போக்குவரத்தில் பாதுகாப் பையே மீறும்வகையில் இத் தாலி வீரர்கள் நடந்துள்ள னர். சட்டவிரோத சட்டங் களை ஒடுக்கும் வகையி லும் செயல்பட்டுள்ளனர் என நீதிமன்றம்கணித்துள் ளது. சிஇசட் எல்லையைப் போல, இஇஇசட் எனப்ப டும் பிரத்யேகப் பொருளா தார மண்டலப்பகுதி எல் லையான 24 கடல் மைல் பகுதி கடைசி பகுதியில் இருந்து 200 கடல் மைல் எல் லைவரை உள்ளதாகும். எனவே இந்திய மீனவர் களை சுட்டுக்கொன்ற இத் தாலி வீரர்கள் மீது இந்தியத் தண்டனைச்சட்டத்தில் (ஐபிசி) நடவடிக்கை எடுக் கப்படவேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியது.சம்பவம் நடந்த கடல் பகுதியில் கொள்ளையர் அச்சுறுத்தல் தொடர்பாக கப்பலை செலுத்திய மாலு மிக்கு எந்தவித தகவ லும் தந்ததாக ஆவணங்கள் இல்லை.
அதே நேரத்தில் 2 இந்திய மீனவர்களை சுட் டுக்கொன்றது தொடர்பாக வும் மாலுமியும் எந்தக் குறிப்பும் பதியவில்லை என நீதிமன்றம் கண்டது.கடற்கொள்ளையை தடுக்க மீனவர் படகு மீது, சுடப்பட்டது என்ற வாதத் தையும் நீதிபதி நிராகரித் தார். எந்தவித ஆயுதமும் இல்லாமல் மீன்பிடிபடகில் இருந்த மீனவர்களை சுட் டது கொடூரக்கொலை என நீதிமன்றம் திட்டவட்ட மாக கூறியது.இதேநேரத்தில் கொல் லப்பட்ட 2 மீனவர்களில் ஒரு நபரின் இரண்டு சகோ தரிகளுக்கு தலா ரூ.10 ஆயி ரம் அபராதத்தை நீதிமன் றம் விதித்தது. தங்கள் சகோ தரர் கொல்லப்பட்டது தொடர்பாக வழக்குத் தொடர்ந்த அவர்கள், திடீ ரென தாங்களாக விலக முன் வந்தபோது, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாக இந்த அபராதம் விதிக்கப் பட்டது.

Leave A Reply

%d bloggers like this: