கள்ளக்குறிச்சி, மே 30-
கள்ளக்குறிச்சியில் கிராமப்புற மாற்றுத்திறனாளி களுக்கு புதிய அடையாள அட்டை வழங்குவதற்கு மருத் துவ பரிசோதனை முகாம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இந்த முகாமில் தேர்வு செய்யப்பட்ட 112 மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டைகளும், 361 பேருக்கு உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப் பப்படிவங்களும், 12 பேருக்கு சக்கர நாற்காலி, கண் ணாடி ஆகியவையும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி ஆர்டிஓ உமாபதி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் சம்பத் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டைகள், நலத் திட்டங்களை வழங்கினார். வட்டாட்சியர் மூர்த்தி புது வாழ்வு திட்ட மேலாளர் முத்துவேல், உதவி திட்ட மேலாளர் சித்ரா, சமூக பாது காப்பு திட்ட தனி வட்டாட்சியர் மணிவண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: