நாகப்பட்டினம்,மே30-இந்திய மாணவர் சங்கத் தின் 14வது அகில இந்திய மாநாடு, மதுரையில் செப் டம்பர் 4 முதல் 7ம் தேதி வரை நடக்கவிருப்பதை யொட்டி, மாணவர் சங்கத் தின் நாகை மாவட்ட வர வேற்புக்குழு அமைப்புக் கூட்டம், நாகை எஸ்சி எஸ்ஜிஎம்பி திருமண மண் டபத்தில் செவ்வாய்க்கிழ மை மாலை நடைபெற்றது.மாணவர் சங்க மாவட் டத் தலைவர் பி.மாரியப்பன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் சிந்தன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ்மோகன் சிறப்பு ரையாற்றினார்.சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வ.சிங்கார வேலன், மாநாட்டை விளக்கிப் பேசினார்.100 பேர் கொண்ட மாநாட்டு மாவட்ட வர வேற்புக் குழு அமைக்கப் பட்டது. வரவேற்புக்குழுத் தலைவராக கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினரும், சி.ஐ.டி.யு. நாகை மாவட்டச் செயலாளருமாகிய நாகை மாலி, வரவேற்புக்குழுச் செயலாளராக வ.சிங்கார வேலன், பொருளாளராக வி.தொ.ச.மாவட்டச் செயலாளர் வி.அமிர்தலிங் கம் ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர்.வாலிபர் சங்க மாவட் டச் செயலாளர் ப.சுபாஷ் சந்திரபோஸ், அரசு ஊழி யர் சங்க வட்டச் செய லாளர் ப.அந்துவன்சேரல், தமுஎகச மாவட்டத் தலை வர் ந.காவியன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட் டச் செயலாளர் கே.வி. மனத்துணைநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நாகைமாலி எம்எல்ஏ நிறைவுரை யாற்றினார்.சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் ஆர். தமிழரசன் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.