சென்னை, மே 30 –
பெட்ரோல் விலை உயர் வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை நகரம் முழுவதும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இடதுசாரி கட்சிகள் சார்பில் மே-31 அன்று நடைபெறும் முழு அடைப்பில் கலந்து கொள்ளு மாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இதுபற்றிய விவரம் வருமாறு:மத்திய அரசு கடந்த 3ஆண்டுகளில் 17வது முறை யாக பெட்ரோல் விலையை உயர்த்தி உள்ளது. இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரே நேரத்தில் பெட்ரோலின் விலை லிட் டருக்கு 7 ரூபாய் 98 பைசா உயர்த்தி உள்ளது.சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை குறைந் துள்ள நிலையில் பெட் ரோல் விலை உயர்த்தப்பட் டிருக்கிறது. இதனால் நாடு முழுவதும் பொதுமக்களி டையே கடும் எதிர்ப்பலை எழுந்தது. அதனை திசை திருப்பும் வகையில் செயற் கையான தட்டுப்பாட்டை ஆட்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.இந்த நிலையில், பெட் ரோலியப் பொருட்களின் மீது மத்திய மாநில அரசு கள் விதிக்கும் 40விழுக்காடு வரியை குறைக்க வேண்டும், இறக்குமதி வரியை குறைக்க வேண்டும், பெட்ரோலிய பொருட்களின் விற்பனை விலையை நிர்ணயிக்கும் உரிமையை அரசின் பொறுப்பிலேயே இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட மாற்றுக் கொள்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி இந்தியா முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டுள் ளது.இதன் ஒருபகுதியாக மே-31 அன்று இடதுசாரி கட்சிகள் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்தத் திற்கு அறைகூவல் விடுக்கப் பட்டது.
தமிழகத்திலும் மறி யல், கடையடைப்பு, ஆர்ப் பாட்டம் உள்ளிட்ட வடி வங்களில் எதிர்ப்பை தெரி விக்க அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.இதனையடுத்து மார்க் சிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை நகரம் முழுவதும் பிரச்சார இயக்கம் நடை பெற்றது. “நிரந்தரமாக பெட்ரோல் விலை உயர்வை நம் தலையில் ஏற்று முயல் வதை தடுக்க மே-31 அன்று ஒரு நாள் வாகனங்களை இயக்காதீர்!, கடைகளை திறக்காதீர்!, பயணங்களை தவீர்ப்பீர்!” என்று முழங்கி யபடி பல்லாயிரக்கணக் கான துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடையே கட்சி ஊழியர்கள் விநியோகித்த னர். தெருத்தெருவாக சென் றும் பிரச்சாரம் செய்தனர். மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் ஆட்டோ பிரச் சாரம் மேற்கொண்டனர்.இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரவை ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஆங்காங்கே வியாரிகள் கூட்டம் நடத்தி கடைய டைப்பு செய்ய திட்டமிட் டுள்ளனர். ஆட்டோ ஓட்டு நர்களும் முழுவேலை நிறுத் தத்தில் ஈடுபடுகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: